Adhisayamaana Oolimaya Naadaam - அதிசயமான ஒளிமய நாடாம்

    Adhisayamaana Oolimaya Naadaam - அதிசயமான ஒளிமய நாடாம்


    அதிசயமான ஒளிமய நாடாம்
    நேசரின் நாடாம் – நான்
    வாஞ்சிக்கும் நாடாம் -என்

    சரணங்கள்

    1. பாவம் இல்லாத நாடு
    ஒரு சாபமும் காணா நாடு
    நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்
    உன்னதத்தில் ஓசன்னா அல்லேலூயா
    — அதிசயமான

    2. சந்திர சூரியன் இல்லை
    ஆனால் இருள் ஏதும் காணவில்லை
    தேவ குமாரன் ஜோதியில் ஜோதி
    நித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல்
    — அதிசயமான

    3. விதவிதக் கொள்கை இல்லை
    பலப் பிரிவுள்ள பலகை இல்லை
    ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்
    எங்குமே அன்பு மயம் – அன்புள்ளோர் செல்லும்
    — அதிசயமான

    4. பிரச்சனை ஏதும் இல்லை
    வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை
    மொழி , நிறம் , ஜாதி பற்று உடையோர்
    எவருமே அங்கு இல்லை
    — அதிசயமான

    5. கடைத்தெரு ஏதும் இல்லை
    தொழிற்சாலைகள் ஒன்றும் இல்லை
    தரித்திரர் , செல்வர் ,சிறியவர் , பெரியோர்
    ஆகிய சிறப்பும் இல்லை – எல்லாம் சமம்
    — அதிசயமான

    6. பல பலத் திட்டம் இல்லை – ஆளும்
    சட்டங்கள் ஏதுமில்லை
    காவல் துறையில்லை , கண்டிப்பும் இல்லை
    மனிதனின் ஆட்சி இல்லை – பேரானந்தம்
    — அதிசயமான

    7. இயேசுவின் இரத்தத்தினால் – பாவம்
    கழுவினால் செல்லலாமே
    இத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்
    பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர்
    — அதிசயமான


    Athisayamaana Olimaya Naadaam
    Naesarin Naadaam – Naan
    Vaanjikkum Naadaam -en

    Saranangal

    1. Paavam Illaatha Naadu
    Oru Saapamum Kaannaa Naadu
    Niththiya Makilchchi Oyaatha Geetham
    Unnathaththil Osannaa Allaelooyaa
    — Athisayamaana

    2. Santhira Sooriyan Illai
    Aanaal Irul Aethum Kaanavillai
    Thaeva Kumaaran Jothiyil Jothi
    Niththiya Velichchamaavaar – Entum Pakal
    — Athisayamaana

    3. Vithavithak Kolkai Illai
    Palap Pirivulla Palakai Illai
    Orae Oru Kudumpam Orae Oru Thalaivar
    Engumae Anpu Mayam – Anpullor Sellum
    — Athisayamaana

    4. Pirachchanai Aethum Illai
    Veenn Kulappangal Ontum Illai
    Moli , Niram , Jaathi Pattu Utaiyor
    Evarumae Angu Illai
    — Athisayamaana

    5. Kataiththeru Aethum Illai
    Tholirsaalaikal Ontum Illai
    Thariththirar , Selvar ,siriyavar , Periyor
    Aakiya Sirappum Illai – Ellaam Samam
    — Athisayamaana

    6. Pala Palath Thittam Illai – Aalum
    Sattangal Aethumillai
    Kaaval Thuraiyillai , Kanntippum Illai
    Manithanin Aatchi Illai – Paeraanantham
    — Athisayamaana

    7. Yesuvin Iraththaththinaal – Paavam
    Kaluvinaal Sellalaamae
    Iththanai Periya Silaakkiyam Ilappor
    Poomiyil Evarum Vaenndaam – Inte Vaareer
    — Athisayamaana

    Adhisayamaana Oolimaya Naadaam - அதிசயமான ஒளிமய நாடாம் Adhisayamaana Oolimaya Naadaam - அதிசயமான ஒளிமய நாடாம் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.