Aethaenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம் - Christking - Lyrics

    Aethaenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம்


    1. ஏதேனில் ஆதி மணம்
    உண்டான நாளிலே
    பிறந்த ஆசீர்வாதம்
    மாறாதிருக்குமே.

    2. இப்போதும் பக்தி யுள்ளோர்
    விவாகம் தூய்மையாம்;
    மூவர் பிரசன்னமாவார்,
    மும்முறை வாழ்த்துண்டாம்.

    3. ஆதாமுக்கு ஏவாளை
    கொடுத்த பிதாவே,
    இம்மாப்பிள்ளைக்கிப் பெண்ணை
    கொடுக்க வாருமே.

    4. இரு தன்மையும் சேர்ந்த
    கன்னியின் மைந்தனே,
    இவர்கள் இரு கையும்
    இணக்க வாருமே.

    5. மெய் மணவாளனான
    தெய்வ குமாரர்க்கே
    சபையாம் மனையாளை
    ஜோடிக்கும் ஆவியே.

    6. நீரும் இந்நாளில் வந்து,
    இவ்விரு பேரையும்
    இணைத்து அன்பாய் வாழ்த்தி
    மெய்ப் பாக்கியம் ஈந்திடும்.

    7. கிறிஸ்துவின் பாரியோடே
    எழும்பும் வரைக்கும்
    எத்தீங்கில் நின்று காத்து,
    பேர் வாழ்வு ஈந்திடும்.


    1. Aethaenil Aathi Manam
    Unndaana Naalilae
    Pirantha Aaseervaatham
    Maaraathirukkumae.

    2. Ippothum Pakthi Yullor
    Vivaakam Thooymaiyaam;
    Moovar Pirasannamaavaar,
    Mummurai Vaalththunndaam.

    3. Aathaamukku Aevaalai
    Koduththa Pithaavae,
    Immaappillaikkip Pennnnai
    Kodukka Vaarumae.

    4. Iru Thanmaiyum Serntha
    Kanniyin Mainthanae,
    Ivarkal Iru Kaiyum
    Inakka Vaarumae.

    5. Mey Manavaalanaana
    Theyva Kumaararkkae
    Sapaiyaam Manaiyaalai
    Jotikkum Aaviyae.

    6. Neerum Innaalil Vanthu,
    Ivviru Paeraiyum
    Innaiththu Anpaay Vaalththi
    Meyp Paakkiyam Eenthidum.

    7. Kiristhuvin Paariyotae
    Elumpum Varaikkum
    Eththeengil Nintu Kaaththu,
    Paer Vaalvu Eenthidum.

    Aethaenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம் Aethaenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம் Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.