Alleluya Thuthi Alleluya - அல்லேலூயா துதி அல்லேலூயா - Christking - Lyrics

    Alleluya Thuthi Alleluya - அல்லேலூயா துதி அல்லேலூயா


    அல்லேலூயா துதி, அல்லேலூயா ஜெயம்,
    வல்லத் திரியேகமகத்வ தேவற்கென்றும்.

    சொல்லரும் சுத்த சுவிதந்தவர்
    தூயன் சகாயனுபாயனாம் நேயற்கு

    வானம் புவியும்படைத்த பிதாவுக்கும்
    மைந்தரை மீட்ட சுத னென்ற தேவற்கும்
    ஞானவி சேடம் வெளியிட்ட ஆவிக்கும்
    நம்மாலிந்நாளு மெந்நாளும் நற்றோத்திரம்.

    வேதோபதேச அப்போஸ்தலன்மார்களை
    மேதினியெங்கும் அனுப்பித்திருமறை
    தீதறப்போதகஞ் செய்யவழி செய்த
    சிங்காரக்கர்த்தருக்கு மங்காமகத்வர்க்கு

    வாதைகள் மெத்த வதைத்துந் திருச்சபை
    வாடாது மிக்கச் செழிப்பாய் வளர்ந்திட,
    ஏதுங்குறைவறவே செய்த தேவனை
    ஏற்றித் துதி செய்வம், போற்றிப் புகழ்செய்வம்

    ஆகாதபேயின் அகோரத்தினாற் சபை
    யானதுள்வந்து புகுந்த பிழைகளை
    வாகாக நீக்கவழி செய்த கர்த்தனை
    வந்தனை செய்வோம் நாம் சிந்தனையாகவே

    வானாதி சேனைமகிழ்ந் திசைகள்பாட
    மக்கட்குழாமும் களிப்புடனேசேர,
    ஈனப்பிசாசின் இடர்களெல்லாந்தீர,
    ஏகன் தயை செய்தார், வாகாய் அருள்பெய்தார்


    Allaelooyaa Thuthi, Allaelooyaa Jeyam,
    Vallath Thiriyaekamakathva Thaevarkentum.

    Sollarum Suththa Suvithanthavar
    Thooyan Sakaayanupaayanaam Naeyarku

    Vaanam Puviyumpataiththa Pithaavukkum
    Maintharai Meetta Sutha Nenta Thaevarkum
    Njaanavi Sedam Veliyitta Aavikkum
    Nammaalinnaalu Mennaalum Nattaththiram.

    Vaethopathaesa Apposthalanmaarkalai
    Maethiniyengum Anuppiththirumarai
    Theetharappothakanj Seyyavali Seytha
    Singaarakkarththarukku Mangaamakathvarkku

    Vaathaikal Meththa Vathaiththun Thiruchchapai
    Vaadaathu Mikkach Selippaay Valarnthida,
    Aethunguraivaravae Seytha Thaevanai
    Aettith Thuthi Seyvam, Pottip Pukalseyvam

    Aakaathapaeyin Akoraththinaar Sapai
    Yaanathulvanthu Pukuntha Pilaikalai
    Vaakaaka Neekkavali Seytha Karththanai
    Vanthanai Seyvom Naam Sinthanaiyaakavae

    Vaanaathi Senaimakiln Thisaikalpaada
    Makkatkulaamum Kalippudanaesera,
    Eenappisaasin Idarkalellaantheera,
    Aekan Thayai Seythaar, Vaakaay Arulpeythaar

    Alleluya Thuthi Alleluya - அல்லேலூயா துதி அல்லேலூயா Alleluya Thuthi Alleluya - அல்லேலூயா துதி அல்லேலூயா Reviewed by Christking on July 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.