Anantha Geethangal - ஆனந்த கீதங்கள் - Christking - Lyrics

    Anantha Geethangal - ஆனந்த கீதங்கள்


    ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
    ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்

    புதுமை பாலன் திருமனுவேலன்
    வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
    முன்னுரைப் படியே முன்னணை மீதே
    மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே

    மகிமை தேவன் மகத்துவ ராஜன்
    அடிமை ரூபம் தரித்திர லோகம்
    தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
    துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே

    மனதின் பாரம் யாவையும் நீக்கி
    மரண பயமும் புறம்பே தள்ளி
    மா சமாதானம் மா தேவ அன்பும்
    மாறா விஸ்வாசமும் அளித்தாரே

    அருமை இயேசுவின் திரு நாமம்
    இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
    கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
    வலிமை வாய்ந்திடும் நாமமிதே

    கருணை பொங்க திருவருள் தங்க
    கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
    எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
    எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம்


    Aanantha Geethangal Ennaalum Paati
    Aanndavar Yesuvai Vaalththiduvom

    Puthumai Paalan Thirumanuvaelan
    Varumai Kolam Eduththavathariththaar
    Munnuraip Patiyae Munnannai Meethae
    Mannuyir Meetkavae Piranthaarae

    Makimai Thaevan Makaththuva Raajan
    Atimai Roopam Thariththira Lokam
    Thootharum Paada Maeypparum Potta
    Thuthikkup Paaththirar Piranthaarae

    Manathin Paaram Yaavaiyum Neekki
    Marana Payamum Purampae Thalli
    Maa Samaathaanam Maa Thaeva Anpum
    Maaraa Visvaasamum Aliththaarae

    Arumai Yesuvin Thiru Naamam
    Inimai Thangum Innalkal Neekkum
    Kodumai Paeyin Pelan Odukkum
    Valimai Vaaynthidum Naamamithae

    Karunnai Ponga Thiruvarul Thanga
    Kirupai Poliya Aarpparippomae
    Emmullam Yesu Pirantha Paakkiyam
    Ennnniyae Paatik Konndaadiduvom

    Anantha Geethangal - ஆனந்த கீதங்கள் Anantha Geethangal - ஆனந்த கீதங்கள் Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.