Anbae Anbae - அன்பே! அன்பே! - Christking - Lyrics

    Anbae Anbae - அன்பே! அன்பே!


    அன்பே! அன்பே! அன்பே!
    ஆருயிர் உறவே,
    ஆனந்தம்! ஆனந்தமே!

    1. ஒருநாள் உம்தயை கண்டேனையா,
    அந்நாளென்னை வெறுத்தேனையா,
    உம் தயை பெரிதையா – என்மேல்
    உம் தயை பெரிதையா.

    2. பரலோகத்தின் அருமைப் பொருளே,
    நரலோகரிலன்பேனையா?
    ஆழம் அறிவேனோ – அன்பின்
    ஆழம் அறிவேனோ?

    3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
    மறந்தே திரிந்த துரோகியை
    அணைத்தீர் அன்பாலே – எனையும்
    அணைத்தீர் அன்பாலே.

    4. பரலோகத்தின் பொருளின் மகிமை
    அழியும் புல்லின் பரவைப்போல்
    வாடாதே ஐயா – அன்பு
    வாடாதே ஐயா.

    5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
    இயம்பற்கியலாதாகில் யான்
    இசைக்கவும் எளிதாமோ – பரத்தில்
    இசைக்கவும் எளிதாமோ!


    Anpae! Anpae! Anpae!
    Aaruyir Uravae,
    Aanantham! Aananthamae!

    1. Orunaal Umthayai Kanntaenaiyaa,
    Annaalennai Veruththaenaiyaa,
    Um Thayai Perithaiyaa – Enmael
    Um Thayai Perithaiyaa.

    2. Paralokaththin Arumaip Porulae,
    Naralokarilanpaenaiyaa?
    Aalam Arivaeno – Anpin
    Aalam Arivaeno?

    3. Alainthaen Palanaal Umaiyumariyaa
    Maranthae Thirintha Thurokiyai
    Annaiththeer Anpaalae – Enaiyum
    Annaiththeer Anpaalae.

    4. Paralokaththin Porulin Makimai
    Aliyum Pullin Paravaippol
    Vaadaathae Aiyaa – Anpu
    Vaadaathae Aiyaa.

    5. Ippaarinil Um Anpin Inimai
    Iyamparkiyalaathaakil Yaan
    Isaikkavum Elithaamo – Paraththil
    Isaikkavum Elithaamo!

    Anbae Anbae - அன்பே! அன்பே! Anbae Anbae - அன்பே! அன்பே! Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.