Anburuvaam Em Aandava - அன்புருவாம் எம் ஆண்டவா - Christking - Lyrics

    Anburuvaam Em Aandava - அன்புருவாம் எம் ஆண்டவா


    1. அன்புருவாம் எம் ஆண்டவா,
    எம் ஜெபம் கேளும், நாயகா;
    நாங்கள் உம் ராஜ்ஜியம் ஆண்டாண்டும்
    பாங்குடன் கட்ட அருளும்.

    2. வாலிபத்தில் உம் நுகமே
    வாய்மை வலுவாய் ஏற்றுமே,
    வாழ்க்கை நெறியாம் சத்தியம்
    நாட்ட அருள்வீர் நித்தியம்.

    3. அல்லும் பகலும் ஆசையே
    அடக்கி ஆண்டு, உமக்கே;
    படைக்க எம்மைப் பக்தியாய்
    பழுதேயற்ற பலியாய்.

    4. சுய திருப்தி நாடாதே,
    உம் தீர்ப்பை முற்றும் நாடவே;
    வேண்டாம் பிறர் பயம் தயை,
    வீரமாய்ப் பின் செல்வோம் உம்மை.

    5. திடனற்றோரைத் தாங்கிட,
    துக்கிப்பவரை ஆற்றிட;
    வாக்கால் மனத்தால் யாரையும்
    வருத்தா பலம் ஈந்திடும்.

    6. எளிதாம் வாழ்க்கை ஏங்கிட,
    தீங்கற்ற இன்பம் தேடிட,
    மன்னிக்க முற்றும் தீமையை
    நேசிக்க மனு ஜாதியை.


    1. Anpuruvaam Em Aanndavaa,
    Em Jepam Kaelum, Naayakaa;
    Naangal Um Raajjiyam Aanndaanndum
    Paangudan Katta Arulum.

    2. Vaalipaththil Um Nukamae
    Vaaymai Valuvaay Aettumae,
    Vaalkkai Neriyaam Saththiyam
    Naatta Arulveer Niththiyam.

    3. Allum Pakalum Aasaiyae
    Adakki Aanndu, Umakkae;
    Pataikka Emmaip Pakthiyaay
    Paluthaeyatta Paliyaay.

    4. Suya Thirupthi Naadaathae,
    Um Theerppai Muttum Naadavae;
    Vaenndaam Pirar Payam Thayai,
    Veeramaayp Pin Selvom Ummai.

    5. Thidanattaraith Thaangida,
    Thukkippavarai Aattida;
    Vaakkaal Manaththaal Yaaraiyum
    Varuththaa Palam Eenthidum.

    6. Elithaam Vaalkkai Aengida,
    Theengatta Inpam Thaetida,
    Mannikka Muttum Theemaiyai
    Naesikka Manu Jaathiyai.

    Anburuvaam Em Aandava - அன்புருவாம் எம் ஆண்டவா Anburuvaam Em Aandava - அன்புருவாம் எம் ஆண்டவா Reviewed by Christking on July 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.