Arpana Malarai Vanthaen - அர்ப்பண மலராய் வந்தேன் - Christking - Lyrics

    Arpana Malarai Vanthaen - அர்ப்பண மலராய் வந்தேன்


    அர்ப்பண மலராய் வந்தேன்

    அர்ச்சனை ஆக்கினேன் என்னை – 2

    மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும் – 2

    வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் – அந்த

    ஜோதியில் நிறைவு கொள்வேன் – 2

    கோதுமை மணியாய் மடிந்து – என்னை

    வெண்ணிற அப்பமாய் தந்தேன் – 2

    என்னுடல் உன்னுடலாகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே

    மகிழ்வுடன் தந்தேனே என்னை கனிவுடன் ஏற்பாயே

    விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் – புவி

    அதிபதி உன் திட்டம் மறந்தேன் – 2

    மதியில்லாதவன் ஆனாலும் கதியிழந்தே நான் போனாலும்

    சுதியுடன் சேர்த்துக்கொள்வாய் நான் ஜதியுடன் பாட்டிசைப்பேன்


    Arppana Malaraay Vanthaen

    Archchanai Aakkinaen Ennai – 2

    Manamillaatha Malaraanaalum Ithalvaatiyae Ponaalum – 2

    Vaelviyil Serththukkolvaay – Antha

    Jothiyil Niraivu Kolvaen – 2

    Kothumai Manniyaay Matinthu – Ennai

    Vennnnira Appamaay Thanthaen – 2

    Ennudal Unnudalaakidavae Unnudalaay Naan Maaridavae

    Makilvudan Thanthaenae Ennai Kanivudan Aerpaayae

    Vithiyennum Sakathiyil Saaynthaen – Puvi

    Athipathi Un Thittam Maranthaen – 2

    Mathiyillaathavan Aanaalum Kathiyilanthae Naan Ponaalum

    Suthiyudan Serththukkolvaay Naan Jathiyudan Paattisaippaen

    Arpana Malarai Vanthaen - அர்ப்பண மலராய் வந்தேன் Arpana Malarai Vanthaen - அர்ப்பண மலராய் வந்தேன் Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.