Athikalai Thinam Thedi - அதிகாலை தினம் தேடியே - Christking - Lyrics

    Athikalai Thinam Thedi - அதிகாலை தினம் தேடியே


    அதிகாலை தினம் தேடியே
    உம் முகத்தினில் விழித்திடுவேன்
    புதுக் கிருபை அதைத் தேடியே
    உம் பாதத்தில் அமர்ந்திடுவேன்

    ஆனந்தம் பேரின்பம் என்
    அன்பரின் பாதத்திலே
    ராஜா அல்லேலூயா-என்
    தேவா அல்லேலூயா

    கரங்களை விரித்து கர்த்தரைப் பார்த்து
    காலையில் பணிந்திடுவேன்
    கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து
    மகிமையை செலுத்திடுவேன்
    பாதத்திலே முகம் பரித்து
    முத்தங்கள் செய்திடுவேன்

    கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட
    கண்களும் விழித்திடுதே உம்
    மனம் குளிர என் மனம்
    பாட ஆயத்தமாகிடுதே
    உம் வசனம் தியானித்திட
    என் உள்ளம் காத்திடுதே

    கண்ணிமை நேரம் உம்மை
    மறவாமல் கருத்தாய் நினைத்திடவே
    கனிவாய் இரங்கி கருனை ஈந்து
    கரத்தால் அணைதிடுமே
    நாள் முழுவதும் வல்லமையால்
    நிதமும் நனைத்திடுமே


    Athikaalai Thinam Thaetiyae
    Um Mukaththinil Viliththiduvaen
    Puthuk Kirupai Athaith Thaetiyae
    Um Paathaththil Amarnthiduvaen

    Aanantham Paerinpam en
    Anparin Paathaththilae
    Raajaa Allaelooyaa-en
    Thaevaa Allaelooyaa

    Karangalai Viriththu Karththaraip Paarththu
    Kaalaiyil Panninthiduvaen
    Kavalaiyai Maranthu Makilvudan Irunthu
    Makimaiyai Seluththiduvaen
    Paathaththilae Mukam Pariththu
    Muththangal Seythiduvaen

    Kathiravan Varum Mun Karththarai Thaeda
    Kannkalum Viliththiduthae Um
    Manam Kulira en Manam
    Paada Aayaththamaakiduthae
    Um Vasanam Thiyaaniththida
    En Ullam Kaaththiduthae

    Kannnnimai Naeram Ummai
    Maravaamal Karuththaay Ninaiththidavae
    Kanivaay Irangi Karunai Eenthu
    Karaththaal Annaithidumae
    Naal Muluvathum Vallamaiyaal
    Nithamum Nanaiththidumae

    Athikalai Thinam Thedi - அதிகாலை தினம் தேடியே Athikalai Thinam Thedi - அதிகாலை தினம் தேடியே Reviewed by Christking on July 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.