Eeshayin Adi Marame - ஈசாயின் அடி மரமே - Christking - Lyrics

    Eeshayin Adi Marame - ஈசாயின் அடி மரமே


    ஈசாயின் அடி மரமே
    நேசா நீர் அதன் கிளையே
    ஏசாயா உரைத்திடும் மெய்பொருளே
    ஏதென்று அறிந்திடுவோம்

    திகழும் ஜோதி தவழும் காட்சி
    புகழும் நற்செய்தியே மகிழ்ச்சி
    ஏக புதல்வன் தேவகுமாரன்
    இயேசு கிறிஸ்து இவரே

    யூதாவின் பால சிங்கம்
    நாதா உம் நாமமோங்கும்
    யாக்கோபில் உதிக்கும் ஓர் நட்சத்திரம்
    யார் என்று விளம்பிடுவோம்

    தாவீதின் ஊர் தனிலே
    தாயார் மரி மகனே
    வான பரன் பிறந்தார் அதனை
    வாரும் சென்றுரைத்திடுவோம்

    வானோர் பராபரனே
    ஏனோ வந்தார் புவியே
    பாவியின் அடைக்கலமாய் உதித்தார்
    பாரும் நாம் வணங்கிடுவோம்

    ஆலோசனை கர்த்தரே
    அதிசயமானவரே
    கர்த்ததுவம் அவர் தோளிலுண்டே
    கண்டே இன்றுணர்ந்திடுவோம்

    செங்கோலும் யுதாவிலே
    மங்கி மறைந்திடாதே
    சமாதான கர்த்தர் வருமளவும்
    சேர்ந்தென்றும் முழங்கிடுவோம்


    Eesaayin Ati Maramae
    Naesaa Neer Athan Kilaiyae
    Aesaayaa Uraiththidum Meyporulae
    Aethentu Arinthiduvom

    Thikalum Jothi Thavalum Kaatchi
    Pukalum Narseythiyae Makilchchi
    Aeka Puthalvan Thaevakumaaran
    Yesu Kiristhu Ivarae

    Yoothaavin Paala Singam
    Naathaa Um Naamamongum
    Yaakkopil Uthikkum or Natchaththiram
    Yaar Entu Vilampiduvom

    Thaaveethin Oor Thanilae
    Thaayaar Mari Makanae
    Vaana Paran Piranthaar Athanai
    Vaarum Senturaiththiduvom

    Vaanor Paraaparanae
    Aeno Vanthaar Puviyae
    Paaviyin Ataikkalamaay Uthiththaar
    Paarum Naam Vanangiduvom

    Aalosanai Karththarae
    Athisayamaanavarae
    Karththathuvam Avar Tholilunntae
    Kanntae Intunarnthiduvom

    Sengalum Yuthaavilae
    Mangi Marainthidaathae
    Samaathaana Karththar Varumalavum
    Sernthentum Mulangiduvom

    Eeshayin Adi Marame - ஈசாயின் அடி மரமே Eeshayin Adi Marame - ஈசாயின் அடி மரமே Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.