Elundhu Betheluku Po – எழுந்து பெத்தேலுக்கு போ - Christking - Lyrics

    Elundhu Betheluku Po – எழுந்து பெத்தேலுக்கு போ


    எழுந்து பெத்தேலுக்கு போ
    அதுதானே தகப்பன் வீடு
    நன்மைகள் பல செய்த
    நல்லவர் இயேசுவுக்கு
    நன்றி பாடல் பாடனும்
    துதி பலிபீடம் கட்டணும்

    ஆபத்துநாளிலே பதில் தந்தாரே
    அதற்கு நன்றி சொல்வோம்
    நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே
    அதற்கு நன்றி சொல்வோம்

    அப்பா தகப்பனே நன்றி நன்றி
    எழுந்து பெத்தேல் செல்லுவோம்

    போகுமிடமெல்லாம் கூடயிருந்து
    காத்து கொள்வேனென்றீர்
    சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்
    கைவிடமாட்டேனென்றீர்

    எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி
    என்னை மீட்டீரையா
    வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து
    நடத்தி வந்தீரையா

    பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்
    ஆதரித்த ஆயரே
    ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு
    வணங்கிய எங்கள் தெய்வமே

    படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்
    என்று வாக்குரைத்தீரையா
    பலுகி பெருகி தேசமாய் மாறுவோம்
    என்று வாக்குரைத்தீரையா

    அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள்
    அகற்றி புதைத்திடுவோம்
    ஆடை மாற்றுவோம் தூய்மையாக்குவோம்
    பாடி கொண்டாடுவோம்

    வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை
    தெரிந்து கொண்டீர்
    இஸ்ரவேல் இனமாய் ஆசீர்வதித்து
    பலுகிப்பெருகச் செய்தீர்


    Ezhundhu Bethaelukku Poa
    Adhuthaane Thagapan Veedu
    Nanmaigal Pala Seidha
    Nallavar Yaesuvukku
    Nandri Paadal Paadanum
    Thudhi Balipeedam Kattanum

    Aabathunaalilae Badhil Thandhaarae
    Adharku Nandri Solluvoam
    Nadandha Paadhaiyellaam Kooda Vandhaarae
    Adharku Nandri Solluvoam
    Appaa Thagappanae Nandri Nandri
    Ezhundhu Bethael Selluvoam

    Poagumidamellaam Koodayirundhu
    Kaathu Kolvaenendreer
    Sonnadhai Seidhu Mudikum Varaikkum
    Kaividamaataenendreer

    Pirandhanaal Mudhal Innaal Varaikkum
    Aadharitha Aayarae
    Aabiragaam Eesaaku Vazhipattu
    Vanangiya Engal Dheivamae

    Ellaa Theemaikum Neengalaakki
    Ennai Meeteeraiyaa
    Vaazhnaal Muzhuvadhum Meipanaayirundhu
    Nadathi Vandheeraiyaa

    Paduthirukkum Indha Boomi Sondhamaagum
    Endru Vaakuraitheeraiyaa
    Palugi Perugi Dhaesamaai Maaruvoam
    Endru Vaakuraitheeraiyaa

    Anniya Dheivangal Aruvaruppugal
    Agatri Pudhaithiduvaom
    Aadai Maatruvoam Thooimaiyaakuvoam
    Paadi Kondaaduvoam

    Verungaiyoadu Bayandhu Oadiya Yaakkoabai
    Therindhu Kondeer
    Isravael Inamaai Aasirvadhithu
    Palugiperuga Seidheer

    Elundhu Betheluku Po – எழுந்து பெத்தேலுக்கு போ  Elundhu Betheluku Po – எழுந்து பெத்தேலுக்கு போ Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.