Elunthar Iraivan – எழுந்தார் இறைவன் - Christking - Lyrics

    Elunthar Iraivan – எழுந்தார் இறைவன்


    எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவே
    எழுந்தார் இறைவன்

    1. விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்
    தழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்
    கெழுந்து நாம் அவரையே போற்ற – எழுந்தார்

    2. செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்
    நித்திய ஜீவனை அளிக்கத் – தேவ
    பக்தர் யாவரும் களிக்க – எழுந்தார்

    3. கருதிய காரியம் வாய்க்கத் – தேவ
    சுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்
    இரு திறத்தாரையும் சேர்க்க – எழுந்தார்

    4. சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்ட
    ஆவியின் வல்லமையை அழிக்க – இப்
    பூவின் மீதுசபை செழிக்க – எழுந்தார்

    5. ஏதுந் தீவினை செய்யாத் தூயன் – எப்
    போதுமே நன்மைபுரி நேயன் – தப்
    பாது காத்திடும் நல்லாயன் – எழுந்தார்


    Elunthaar Iraivan - Jeyamae Jeyamenavae
    Elunthaar Iraivan

    1. Vilunthavaraik Karaiyaettap - Paavath
    Thalunthu Manukkulaththai Maatta - Vinnnuk
    Kelunthu Naam Avaraiyae Potta - Elunthaar

    2. Seththavar Meenndumae Pilaikka - Uyar
    Niththiya Jeevanai Alikkath - Thaeva
    Pakthar Yaavarum Kalikka - Elunthaar

    3. Karuthiya Kaariyam Vaaykkath - Thaeva
    Suruthi Molikalellaam Kaakka - Nam
    Iru Thiraththaaraiyum Serkka - Elunthaar

    4. Saavin Payangaraththai Olikkak - Ketta
    Aaviyin Vallamaiyai Alikka - Ip
    Poovin Meethusapai Selikka - Elunthaar

    5. Aethun Theevinai Seyyaath Thooyan - Ep
    Pothumae Nanmaipuri Naeyan - Thap
    Paathu Kaaththidum Nallaayan - Elunthaar

    Elunthar Iraivan – எழுந்தார் இறைவன் Elunthar Iraivan – எழுந்தார் இறைவன் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.