En Idhayam Sollum - என் இதயம் சொல்லும் - Christking - Lyrics

    En Idhayam Sollum - என் இதயம் சொல்லும்


    என் இதயம் சொல்லும்
    என் உதடும் பாடும்
    நீர் மட்டும் உண்மை அன்பு என்று

    உண்மையில்லா உலகினில் உயிர் தவித்தேனே
    உறவென்று நினைத்தோரும் உதறிப் போனார்
    ஆனாலும் வாழ்வில் திரும்ப வரச் செய்தீர்
    வாக்குத்தத்தம் தந்தென்னை திடப்படுத்தினீர்

    கொடுமையாய் பேசும் சிலர் குரலைக் கேட்டேன்
    நம்பிக்கை இல்லாமல் நினைவில் துடித்தேன்
    நினைவில் வரும் பாரம் தெரிந்தவர் நீரே
    என் சுமை சுமந்து கொண்டு உதவினீரே

    இனி வாழ்க்கை இல்லை எல்லாம் முடிந்ததென்று
    வாழ்வதா சாவா என்று நினைத்த போதும்
    எல்லா இடங்களிலும் எல்லா நிமிடமும்
    என் கூடவே இருந்து தேற்றினீரே


    En Ithayam Sollum
    En Uthadum Paadum
    Neer Mattum Unnmai Anpu Entu

    Unnmaiyillaa Ulakinil Uyir Thaviththaenae
    Uraventu Ninaiththorum Utharip Ponaar
    Aanaalum Vaalvil Thirumpa Varach Seytheer
    Vaakkuththaththam Thanthennai Thidappaduththineer

    Kodumaiyaay Paesum Silar Kuralaik Kaettaen
    Nampikkai Illaamal Ninaivil Thutiththaen
    Ninaivil Varum Paaram Therinthavar Neerae
    En Sumai Sumanthu Konndu Uthavineerae

    Ini Vaalkkai Illai Ellaam Mutinthathentu
    Vaalvathaa Saavaa Entu Ninaiththa Pothum
    Ellaa Idangalilum Ellaa Nimidamum
    En Koodavae Irunthu Thaettineerae

    En Idhayam Sollum - என் இதயம் சொல்லும் En Idhayam Sollum - என் இதயம் சொல்லும் Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.