En Intha Paaduthan Swamy - ஏன் இந்தப் பாடுதான் சுவாமி

    En Intha Paaduthan Swamy - ஏன் இந்தப் பாடுதான் சுவாமி


    ஏன் இந்தப் பாடுதான் சுவாமி
    என்ன தருவேன் இதற் கீடுநான்

    ஆனந்த நேமியே
    எனை ஆளவந்த குரு சுவாமியே

    கெத்சேமனேயிடம் ஏகவும் அதின்
    கெழு மலர்க் காவிடை போகவும்
    அச்சயனே மனம் நோகவும் சொல்
    அளவில்லாத் துயரமாகவும்

    முழந்தாள் படியிட்டுத் தாழவும் மும்
    முறை முகம் தரைபடவீழவும்
    மழுங்கத் துயர் உமைச் சூழவும் கொடு
    மரண வாதையினில் மூழ்கவும்

    அப்பா பிதாவே என்றழைக்கவும் துயர்
    அகலச் செய்யும் என்றுரைக்கவும்
    செப்பும் உம் சித்தம் என்று சாற்றவும் ஒரு
    தேவதூதன் வந்து தேற்றவும்

    ஆத்துமத் துயர் மிக நீடவும் குழம்
    பாக உதிர வேர்வை ஓடவும்
    சாத்திர மொழிகள் ஒத்தாடவும் உந்தன்
    தாசரும் பதந்தனை நாடவும்


    Aen Inthap Paaduthaan Suvaami
    Enna Tharuvaen Ithar Geedunaan

    Aanantha Naemiyae
    Enai Aalavantha Kuru Suvaamiyae

    Kethsemanaeyidam Aekavum Athin
    Kelu Malark Kaavitai Pokavum
    Achchayanae Manam Nnokavum Sol
    Alavillaath Thuyaramaakavum

    Mulanthaal Patiyittuth Thaalavum Mum
    Murai Mukam Tharaipadaveelavum
    Malungath Thuyar Umaich Soolavum Kodu
    Marana Vaathaiyinil Moolkavum

    Appaa Pithaavae Entalaikkavum Thuyar
    Akalach Seyyum Enturaikkavum
    Seppum Um Siththam Entu Saattavum Oru
    Thaevathoothan Vanthu Thaettavum

    Aaththumath Thuyar Mika Needavum Kulam
    Paaka Uthira Vaervai Odavum
    Saaththira Molikal Oththaadavum Unthan
    Thaasarum Pathanthanai Naadavum

    En Intha Paaduthan Swamy - ஏன் இந்தப் பாடுதான் சுவாமி En Intha Paaduthan Swamy - ஏன் இந்தப் பாடுதான் சுவாமி Reviewed by Christking on July 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.