En Yesuve Ummai Allamal - என் இயேசுவே உம்மை அல்லால் - Christking - Lyrics

    En Yesuve Ummai Allamal - என் இயேசுவே உம்மை அல்லால்


    என் இயேசுவே உம்மை அல்லால்
    மண்ணில் ஆறுதல் ஒன்றுமே கண்டிலேன்

    சுக செல்வ மகிமை பெருமையிலெங்கும்
    இன்பம் தரும் பொருள் காணேன்
    தாகம் பெருகும் தண்ணீரேயன்றி
    லோகம் வேறொன்றும் நல்காதே

    ஆபத்துக் காலத்தில் அனுகூலமான
    துணையும் நீர் பெலனுமே நாதா
    ஆகையால் பூமி நிலை மாறினாலும்
    அஞ்சேன் கடல் பொங்கினாலும்

    பாழ்மணல் பாதையில் எரியும் வெயிலில்
    பரனே உம் கிருபையின் நிழலில்
    பாடி மகிழ்வேன் குருசை புகழ்வேன்
    பேரின்ப நாட்டில் நான் வாழ்வேன்

    என் நேசர் இயேசுவில் நித்தமும் சார்ந்து
    பரதேச யாத்திரை செய்வேன்
    பாரினில் பொங்கும் துயரங்கள் தங்கும்
    பாரங்கள் ஏதும் நானறியேன்

    உமதன்பின் இனிமையை என்றும் ருசிப்பேன்
    உலகின் வினைகள் மறப்பேன்
    உருகும் என் நெஞ்சம் அருளும் நல் தஞ்சம்
    பெருகும் என் இதயத்தின் இன்பம்


    En Yesuvae Ummai Allaal
    Mannnnil Aaruthal Ontumae Kanntilaen

    Suka Selva Makimai Perumaiyilengum
    Inpam Tharum Porul Kaanneen
    Thaakam Perukum Thannnneeraeyanti
    Lokam Vaerontum Nalkaathae

    Aapaththuk Kaalaththil Anukoolamaana
    Thunnaiyum Neer Pelanumae Naathaa
    Aakaiyaal Poomi Nilai Maarinaalum
    Anjaen Kadal Ponginaalum

    Paalmanal Paathaiyil Eriyum Veyilil
    Paranae Um Kirupaiyin Nilalil
    Paati Makilvaen Kurusai Pukalvaen
    Paerinpa Naattil Naan Vaalvaen

    En Naesar Yesuvil Niththamum Saarnthu
    Parathaesa Yaaththirai Seyvaen
    Paarinil Pongum Thuyarangal Thangum
    Paarangal Aethum Naanariyaen

    Umathanpin Inimaiyai Entum Rusippaen
    Ulakin Vinaikal Marappaen
    Urukum en Nenjam Arulum Nal Thanjam
    Perukum en Ithayaththin Inpam

    En Yesuve Ummai Allamal - என் இயேசுவே உம்மை அல்லால் En Yesuve Ummai Allamal - என் இயேசுவே உம்மை அல்லால் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.