Enadhu Manavaalane En - எனது மணவாளனே என் - Christking - Lyrics

    Enadhu Manavaalane En - எனது மணவாளனே என்


    எனது மணவாளனே என் இதய ஏக்கமே
    இனியவரே இயேசையா
    உம்மைத் தான் தேடுகிறேன் நான்
    உம்மைத் தான் நேசிக்கிறேன்

    உம் நாமம் சொல்லச் சொல்ல என்
    உள்ளமெல்லாம் துள்ளுதையா
    உம் அன்பைப் பாடப் பாட
    இதயமெல்லாம் இனிக்குதையா என்

    உம் முகம் பார்க்கணுமே
    உம் அழகை ரசிக்கணுமே
    உம் பாதம் அமரணுமே
    உம் சித்தம் அறியணுமே நான்

    என் வாயின் சொற்களெல்லாம்
    ஏற்றனவாய் இருப்பதாக
    என் இதய எண்ணமெல்லாம்
    உகந்தனவாய் இருப்பதாக உமக்கு

    அழகெல்லாம் அற்றுப் போகும் உலக
    எழிலெல்லாம் ஏமாற்றும்
    உம் அன்பு மாறாதையா
    ஒரு நாளும் அழியாதையா

    நான் பார்க்கும் பார்வையெல்லாம்
    ஏற்றனவாய் இருப்பதாக
    நான் நடக்கும் பாதையெல்லாம்
    உகந்தனவாய் இருப்பதாக


    Enathu Manavaalanae en Ithaya Aekkamae
    Iniyavarae Iyaesaiyaa
    Ummaith Thaan Thaedukiraen Naan
    Ummaith Thaan Naesikkiraen

    Um Naamam Sollach Solla en
    Ullamellaam Thulluthaiyaa
    Um Anpaip Paadap Paada
    Ithayamellaam Inikkuthaiyaa en

    Um Mukam Paarkkanumae
    Um Alakai Rasikkanumae
    Um Paatham Amaranumae
    Um Siththam Ariyanumae Naan

    En Vaayin Sorkalellaam
    Aettanavaay Iruppathaaka
    En Ithaya Ennnamellaam
    Ukanthanavaay Iruppathaaka Umakku

    Alakellaam Attup Pokum Ulaka
    Elilellaam Aemaattum
    Um Anpu Maaraathaiyaa
    Oru Naalum Aliyaathaiyaa

    Naan Paarkkum Paarvaiyellaam
    Aettanavaay Iruppathaaka
    Naan Nadakkum Paathaiyellaam
    Ukanthanavaay Iruppathaaka

    Enadhu Manavaalane En - எனது மணவாளனே என் Enadhu Manavaalane En - எனது மணவாளனே என் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.