Enakku Neram Kidaikum - எனக்கு நேரம் கிடைக்கும் - Christking - Lyrics

    Enakku Neram Kidaikum - எனக்கு நேரம் கிடைக்கும்


    எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்
    என் இயேசுவோடு நான் பேசுவேன்
    நான் பேசுவேன் அவர் பேசுவார்
    இருவரும் சந்தோஷிப்போமே

    ஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன்
    அருகில் வந்தெனக்கு உதவி செய்வார்
    இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவேன்
    இனிமையாய் வந்தெனக்கு பதில் கொடுப்பார்

    அல்லேலூயா… அல்லேலூயா…

    ஆராதனை நேரங்களில் கூப்பிடுவேன்
    ஆவியின் அபிஷேகம் தந்திடுவார்
    அந்நிய பாஷையில் நிரப்பிடுவார்
    அபிஷேக தைலத்தை ஊற்றிடுவார்

    அந்தி சந்தி மதியங்கள் கூப்பிடுவேன்
    முந்தி வந்து எனக்கவர் உதவி செய்வார்
    சபையிலே சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
    சத்தியத்தை உணவாக்கி மகிழ்ந்திடுவேன்

    உற்சாகமாய் கர்த்தருக்கு கொடுத்திடுவேன்
    இரட்டிப்பான நன்மைகளைப் பெற்றிடுவேன்
    ஜீவனின் அதிபதியானவரை – என்
    ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவேன்


    Enakku Naeram Kitaikkum Pothellaam
    En Yesuvodu Naan Paesuvaen
    Naan Paesuvaen Avar Paesuvaar
    Iruvarum Santhoshippomae

    Aapaththu Naeraththil Kooppiduvaen
    Arukil Vanthenakku Uthavi Seyvaar
    Ikkattu Naeraththil Kooppiduvaen
    Inimaiyaay Vanthenakku Pathil Koduppaar

    Allaelooyaa… Allaelooyaa…

    Aaraathanai Naerangalil Kooppiduvaen
    Aaviyin Apishaekam Thanthiduvaar
    Anniya Paashaiyil Nirappiduvaar
    Apishaeka Thailaththai Oottiduvaar

    Anthi Santhi Mathiyangal Kooppiduvaen
    Munthi Vanthu Enakkavar Uthavi Seyvaar
    Sapaiyilae Saatchiyaay Vaalnthiduvaen
    Saththiyaththai Unavaakki Makilnthiduvaen

    Ursaakamaay Karththarukku Koduththiduvaen
    Irattippaana Nanmaikalaip Pettiduvaen
    Jeevanin Athipathiyaanavarai – en
    Jeeviya Kaalamellaam Vaalththiduvaen

    Enakku Neram Kidaikum - எனக்கு நேரம் கிடைக்கும் Enakku Neram Kidaikum - எனக்கு நேரம் கிடைக்கும் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.