Enathu Kartharin Rajareega Naal - எனது கர்த்தரின் ராஜரீக நாள் - Christking - Lyrics

    Enathu Kartharin Rajareega Naal - எனது கர்த்தரின் ராஜரீக நாள்


    எனது கர்த்தரின் ராஜரீக நாள்
    எப்போ வருகுமோ ?
    ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
    எப்போ பெருகுமோ ?

    அனுபல்லவி

    மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே
    வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே
    — எனது

    சரணங்கள்

    1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே
    ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே
    ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே
    ஜெகத்தில் பக்தர்கள் கர்த்தரிடத்துக் கெழுந்து போகவே
    — எனது

    2. தூதர் எக்காளத் தொனியில் என்னிடம் சேர்ப்பேன் என்றாரே
    சோதனை காலந்தனில் தப்பவுன்னைக் காப்பேன் என்றாரே
    பாதக மனுஜாதி வேதனை அடையும் என்றாரே
    பாவ மனுசன் தோன்றி நாசமாய்ப் போவான் என்றாரே
    — எனது

    3. எருசலேமி லிருந்து ஜீவ நதிகள் ஓடுமே
    ஏழைகள் மன மகிழ்ந்து கர்த்தரை ஏந்திப் பாடுமே
    வருஷமாயிரம் அளவும் பூமியில் பலன்கள் நீடுமே
    வானராச்சிய சேனைகள் யாவும் வந்து கூடுமே
    — எனது

    4. சஞ்சலங்களும் தவிப்புகள் யாவும் ஓடிப் போகுமே
    சந்தோஷத்தோடு மகிழ்ச்சியும் வந்து சார்ந்து பிடிக்குமே
    நெஞ்ச மகிழ்ந்து நீதிமான்களின் வாய் துதிக்குமே
    நித்திய ஜீவனைப் பெற என்றன் மனம் துடிக்குமே
    — எனது


    Enathu Karththarin Raajareeka Naal
    Eppo Varukumo ?
    Aengum en Kali Neenga Makilchchi
    Eppo Perukumo ?

    Anupallavi

    Manithasuthanin Ataiyaalam Vinnnnil Kaanum , Entarae
    Vallamaiyodu Makimaiyaayth Thonti Varuvaen Entarae
    — Enathu

    Saranangal

    1. Thaeva Thootharin Kataisi Ekkaalam Thoni Mulangavae
    Jekaththil Aesuvaip Patti Mariththor Uyirththelumpavae
    Jeevanullorum Avarudan Matru Roopamaakavae
    Jekaththil Paktharkal Karththaridaththuk Kelunthu Pokavae
    — Enathu

    2. Thoothar Ekkaalath Thoniyil Ennidam Serppaen Entarae
    Sothanai Kaalanthanil Thappavunnaik Kaappaen Entarae
    Paathaka Manujaathi Vaethanai Ataiyum Entarae
    Paava Manusan Thonti Naasamaayp Povaan Entarae
    — Enathu

    3. Erusalaemi Lirunthu Jeeva Nathikal Odumae
    Aelaikal Mana Makilnthu Karththarai Aenthip Paadumae
    Varushamaayiram Alavum Poomiyil Palankal Needumae
    Vaanaraachchiya Senaikal Yaavum Vanthu Koodumae
    — Enathu

    4. Sanjalangalum Thavippukal Yaavum Otip Pokumae
    Santhoshaththodu Makilchchiyum Vanthu Saarnthu Pitikkumae
    Nenja Makilnthu Neethimaankalin Vaay Thuthikkumae
    Niththiya Jeevanaip Pera Entan Manam Thutikkumae
    — Enathu

    Enathu Kartharin Rajareega Naal - எனது கர்த்தரின் ராஜரீக நாள் Enathu Kartharin Rajareega Naal - எனது கர்த்தரின் ராஜரீக நாள் Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.