Engum Pukal Yaesu - எங்கும் புகழ் யேசு - Christking - Lyrics

    Engum Pukal Yaesu - எங்கும் புகழ் யேசு


    எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
    எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
    உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்
    உயர்வீரரெனப் பக்தர் ஓதுகிறார் — எங்கும்

    1. ஆயிரத் தொருவர் ஆவிரல்லோ நீரும்
    அதை அறிந்து துதி செய்குவீர்
    தாயினும் மடங்குசதம் அன்புடைய
    சாமி யேசுவிக்கிதயம் தந்திடுவீர் — எங்கும்

    2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
    கடன்பட்டவர்கள் கண்திறக்கவே
    பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
    பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் — எங்கும்

    3. தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
    தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
    பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
    பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ? — எங்கும்

    4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
    தூதர் நீங்களே தூயன்வீரரே
    கர்த்தரின் பாதத்தில் காலைமாலை தங்கிக்
    கருணை நிறை வசனம் கற்றிடுவீர் — எங்கும்


    Engum Pukal Yaesu Raasanukkae
    Elil Maatchimai Valar Vaaliparae!

    Ungalaiyallavo Unnmai Vaethang Kaakkum
    Uyarveerarenap Pakthar Othukiraar
    — Engum

    1. Aayirath Thoruvar Aavirallo Neerum
    Athai Arinthu Thuthi Seykuveer
    Thaayinum Madangusatham Anputaiya
    Saami Yaesuvikkithayam Thanthiduveer
    — Engum

    2. Kalvi Kattavarkal Kalvi Kallaathorkkuk
    Kadanpattavarkal Kannthirakkavae
    Palvali Alaiyum Paathai Thappinoraip
    Parinthu Thiruppa Nitham Paarththiduveer
    — Engum

    3. Thaalmai Sarkunamum Thayai Kaarunnyamum
    Thalaippathallo Thakuntha Kalvi?
    Paalunthurkkunamum Paavach Seykaiyaavum
    Paranthodap Paarppathungal Paaramanto?
    — Engum

    4. Suththa Suvisesham Thurithamaaych Sella
    Thoothar Neengalae Thooyanveerarae
    Karththarin Paathaththil Kaalaimaalai Thangik
    Karunnai Nirai Vasanam Kattiduveer
    — Engum

    Engum Pukal Yaesu - எங்கும் புகழ் யேசு Engum Pukal Yaesu - எங்கும் புகழ் யேசு Reviewed by Christking on July 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.