Potri Paaduven Ummai - போற்றிப் பாடுவேன் உம்மை | Jonathan Udhay - Christking - Lyrics

    Potri Paaduven Ummai - போற்றிப் பாடுவேன் உம்மை | Jonathan Udhay



    போற்றிப் பாடுவேன் உம்மை
    மகிமை நிறைந்தவர் நீரே
    உயர்த்தி பாடுவேன் உம்மை
    எங்கள் இராஜாதி இராஜனே
    எங்கள் தேவாதி தேவனே

    ஆராதிப்போம் உம் நாமத்தை
    உயர்த்துவோம் உம் மேன்மையை-2

    1.உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்
    உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்-2
    உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன்
    மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே

    ஆராதிப்போம் உம் நாமத்தை
    உயர்த்துவோம் உம் மேன்மையை-2

    2.தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்
    மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்-2
    உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன்
    வாழ்நாளெல்லாம் துதிப்பேன்
    எங்கள் யெகோவா தேவனே

    ஆராதிப்போம் உம் நாமத்தை
    உயர்த்துவோம் உம் மேன்மையை-2

    3.உம் அன்பை பாடிட வார்த்தைகள் போதாதையா
    உம் நன்மை சொல்லிட நாட்களும் போதாதையா-2
    என்றென்றும் பாடுவோம் உம் நாமம் உயர்த்துவோம்
    உம் சேவை செய்திடுவோம்-என்றும்
    உம்மண்டை சேர்ந்திடுவோம்

    ஆராதிப்போம் உம் நாமத்தை
    உயர்த்துவோம் உம் மேன்மையை-2


    English


    Potri Paaduven Ummai - போற்றிப் பாடுவேன் உம்மை | Jonathan Udhay Potri Paaduven Ummai - போற்றிப் பாடுவேன் உம்மை | Jonathan Udhay Reviewed by Christking on July 28, 2020 Rating: 5

    2 comments:

    Powered by Blogger.