En Belanae - என் பெலனே | Robin Son | Godwin - Christking - Lyrics

    En Belanae - என் பெலனே | Robin Son | Godwin



    என் பெலனே என்னை அழைத்தவரே
    தடுமாறும் வேளையில் தாங்கினீரே
    என் இயேசுவே என்னை அழைத்தவரே
    தடுமாறும் வேளையில் தாங்கினீரே

    1.கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்
    உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்-2
    உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது
    உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது-2
    - என் பெலனே

    2.உபயோகமில்லாத பாத்திரம் நான்
    ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்-2
    ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது
    உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது-2
    - என் பெலனே

    3.சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்
    என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2
    என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்
    என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2
    - என் பெலனே


    English


    En Belanae - என் பெலனே | Robin Son | Godwin En Belanae - என் பெலனே | Robin Son | Godwin Reviewed by Christking on August 15, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.