Enthan Ullam Pudhu Kavi – எந்தன் உள்ளம் புது கவியாலே - Christking - Lyrics

    Enthan Ullam Pudhu Kavi – எந்தன் உள்ளம் புது கவியாலே


    எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க
    இயேசுவை பாடிடுவேன்
    அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
    அவரையே நேசிக்கிறேன்

    பல்லவி

    அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
    அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
    இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
    கர்த்தரைக் கொண்டாடுவேன் – எந்தன் உள்ளம்

    1. சென்ற காலம் முழுவதும் காத்தாரே – ஓர்
    சேதமும் அணுகாமல்
    சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
    சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா
    – எந்தன் உள்ளம்

    2. சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
    சிருஷ்டிகர் மறைத்தாரே
    கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
    கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா
    – எந்தன் உள்ளம்

    3. பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
    தஞ்சமே ஆனாரே
    அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
    அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா
    – எந்தன் உள்ளம்

    4. களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட – என்
    கர்த்தரே வருவாரே
    ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
    அனுதினமும் காத்திருப்போம் – அல்லேலூயா
    – எந்தன் உள்ளம்


    Endhan Ullam Pudhu Kavi Yaale Ponga
    Yesuvai Paadiduven
    Avar Naamam Utrunda Parimala Thailam
    Avaraiyae Nesikkiren

    Hallelujah Thuthi Hallelujah– Endhan
    Annalaam Yesuvai Paadiduven
    Iththanai Kirubaigal Niththamum Aruliya
    Karththaraik Kondaaduven
    – Endhan Ullam

    1. Sendra Kaalam Muzhuvadum Kaaththare – Oar
    Sedhamum Anugaamal
    Sondamaaga Asseer Pozhindenak Kindrum
    Suga Belan Aliththarae
    – Hallelujah

    2. Sila Velai Imaippolude Tam Mugaththai
    Sirustigar Maraiththare
    Kadunkobam Neekki Thirumbavum Enmel
    Kirupaiyum Polintaare
    – Hallelujah

    3. Panja Kaalam Perukida Nerndaalum Tham
    Thanjame Aanare
    Angum Ingum Noigal Paravi Vandaalum
    Adaikkalam Azhiththare
    – Hallelujah

    4. Kalippodu Viraindemmai Serththida – en
    Karththare Varuvaare
    Aavalodu Naamum Vaanaththai Nokki
    Anudhinamum Kaaththiruppom
    – Hallelujah

    Enthan Ullam Pudhu Kavi – எந்தன் உள்ளம் புது கவியாலே Enthan Ullam Pudhu Kavi – எந்தன் உள்ளம் புது கவியாலே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.