Enthan Yesuvin Anbathaiye - எந்தன் இயேசுவின் அன்பதையே - Christking - Lyrics

    Enthan Yesuvin Anbathaiye - எந்தன் இயேசுவின் அன்பதையே


    எந்தன் இயேசுவின் அன்பதையே
    எண்ணும் வேளையில் ஆனந்தமே

    கடந்த நாட்களில் கைவிடாமலே
    கண்ணின் மணிபோல காத்ததினால்
    மனப்பூர்வமாய் துதிப்பேன் மகிழ்வுடனே
    மன்னன் கிறிஸ்தேசுவையே

    அழைத்த பாதையில் தளர்ந்த வேளையில்
    அன்பின் மொழியால் பேசினாரே
    புது ஜீவனும் நிறைவாய் அளித்ததினாலே
    புண்ணியனைப் போற்றிடுவேன்

    வறுமை வியாதியின் வலிய தோல்வியும்
    வந்த வேளையில் தாங்கினாரே
    ஜெய கீதமே தினமும் எவ்வேளையிலும்
    ஜெயத்துடன் பாடிடுவேன்

    நெகிழ்ந்த கரங்களை உயிர்த்து இதுவரை
    இழந்த வரங்களும் ஈந்ததினால்
    அவர் சேவையை புரிந்து கனம் மகிமை
    அவருக்கே செலுத்திடுவேன்

    நிறைந்த ஜோதியாய் திறந்த வானிலே
    நீதி சூரியன் தோன்றிடுவார்
    மறு ரூபமே அடைந்தே பறந்திடுவேன்
    மட்டற்ற பேரின்பமுடன்


    Enthan Yesuvin Anpathaiyae
    Ennnum Vaelaiyil Aananthamae

    Kadantha Naatkalil Kaividaamalae
    Kannnnin Mannipola Kaaththathinaal
    Manappoorvamaay Thuthippaen Makilvudanae
    Mannan Kiristhaesuvaiyae

    Alaiththa Paathaiyil Thalarntha Vaelaiyil
    Anpin Moliyaal Paesinaarae
    Puthu Jeevanum Niraivaay Aliththathinaalae
    Punnnniyanaip Pottiduvaen

    Varumai Viyaathiyin Valiya Tholviyum
    Vantha Vaelaiyil Thaanginaarae
    Jeya Geethamae Thinamum Evvaelaiyilum
    Jeyaththudan Paadiduvaen

    Nekilntha Karangalai Uyirththu Ithuvarai
    Ilantha Varangalum Eenthathinaal
    Avar Sevaiyai Purinthu Kanam Makimai
    Avarukkae Seluththiduvaen

    Niraintha Jothiyaay Thirantha Vaanilae
    Neethi Sooriyan Thontiduvaar
    Matru Roopamae Atainthae Paranthiduvaen
    Mattatta Paerinpamudan

    Enthan Yesuvin Anbathaiye - எந்தன் இயேசுவின் அன்பதையே Enthan Yesuvin Anbathaiye - எந்தன் இயேசுவின் அன்பதையே Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.