Ethanai Thiral En Paavam En Devane - Christking - Lyrics

    Ethanai Thiral En Paavam En Devane


    எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
    எளியன்மேல் இரங்கையனே

    அனுபல்லவி

    நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
    நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே

    — எத்தனை சரணங்கள்

    1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
    பணிந்திடல் ஒழிவேனோ?
    சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்
    தோன்றுது காயங்கள் , தூய சிநேகா !
    — எத்தனை

    2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
    இடைவிடாதிருக்கையிலே ,
    உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே
    உத்தம மனமுடையோய் , எனை ஆளும் !
    — எத்தனை

    3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
    அருகிலிருந்த கள்ளன் போல் ,
    நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
    நீ எனக்காகவே மரித்தனை , பரனே !
    — எத்தனை

    4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
    கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
    இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான்
    எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே !
    — எத்தனை


    Eththanai Thiral en Paavam , en Thaevanae!
    Eliyanmael Irangaiyanae

    Anupallavi

    Niththam en Iruthayam Theeyathen Paranae ;
    Nilaivaram Enil Illai ; Nee en Thaaparamae
    — Eththanai

    Saranangal

    1. Paththam Un Mael Enakkillai Enpaeno
    Panninthidal Olivaeno?
    Suththamurung Karamkaalkal , Vilaavinil
    Thontuthu Kaayangal , Thooya Sinaekaa !
    — Eththanai

    2. Entan Aneethikal en Kannkal Munamae
    Itaividaathirukkaiyilae ,
    Untan Mikung Kirupai , O Mikavum Perithae
    Uththama Manamutaiyoy , Enai Aalum !
    — Eththanai

    3. Aayang Kolvonpol , Paava Sthireepol
    Arukiliruntha Kallan Pol ,
    Naeyamaay Un Sarann en Vananginaen
    Nee Enakkaakavae Mariththanai , Paranae !
    — Eththanai

    4. Ketta Makanpol Thuttanaay Alainthaen
    Kedu Panjaththaal Nalinthaen ;
    Ittamaay Makan Enap Paaththiran Avan Naan
    Enai Ratchiththidal Untan Nimiththamae , Appanae !
    — Eththanai

    Ethanai Thiral En Paavam En Devane Ethanai Thiral En Paavam En Devane Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.