Evare Perumaan - இவரே பெருமான் - Christking - Lyrics

    Evare Perumaan - இவரே பெருமான்


    இவரே பெருமான் மற்றப்
    பேர் அலவே பூமான் – இவரே பெருமான்

    கவலைக் கிடங்கொடுத் தறியார் வேறு
    பவவினை யாதுமே தெரியார் இப்
    புவனமீது நமக்குரியார்

    குருடர்களுக் குதவும் விழியாம் பவக்
    கரும இருளை நீக்கும் ஒளியாம் தெய்வம்
    இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்

    பலபிணி தீர்க்கும் பரிகாரி சொல்லும்
    வலமையில் மிக்க விபகாரி எக்
    குலத்துக்கும் நல்ல உபகாரி

    அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் கொடு
    மறம்விடு பவர்க்கருள் முத்தன் இங்கே
    இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன்

    அலகைதனை ஜெயித்த வீரன் பவ
    உலகை ரட்சித்த எழிற்பேரன் விண்
    ணுலகு வாழ் தேவ குமாரன்

    பொன்னுலகந் தனில்வாழ் யோகன் அருள்
    துன்ன உலகில் நன்மைத் தேகன் நம்பால்
    தன்னை யளித்த ஓர் தியாகன்


    Ivarae Perumaan Mattap
    Paer Alavae Poomaan – Ivarae Perumaan

    Kavalaik Kidangaduth Thariyaar Vaeru
    Pavavinai Yaathumae Theriyaar Ip
    Puvanameethu Namakkuriyaar

    Kurudarkaluk Kuthavum Viliyaam Pavak
    Karuma Irulai Neekkum Oliyaam Theyvam
    Irukkun Thalanjal Vaasal Valiyaam

    Palapinni Theerkkum Parikaari Sollum
    Valamaiyil Mikka Vipakaari Ek
    Kulaththukkum Nalla Upakaari

    Aranj Seyvathinil Oru Siththan Kodu
    Maramvidu Pavarkkarul Muththan Ingae
    Iranthork Kuyireeyum Karththan

    Alakaithanai Jeyiththa Veeran Pava
    Ulakai Ratchiththa Elirpaeran Vinn
    Nulaku Vaal Thaeva Kumaaran

    Ponnulakan Thanilvaal Yokan Arul
    Thunna Ulakil Nanmaith Thaekan Nampaal
    Thannai Yaliththa or Thiyaakan

    Evare Perumaan - இவரே பெருமான் Evare Perumaan - இவரே பெருமான் Reviewed by Christking on August 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.