Idho Manusharin Mathiyil - இதோ மனுஷரின் மத்தியில் - Christking - Lyrics

    Idho Manusharin Mathiyil - இதோ மனுஷரின் மத்தியில்


    இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
    வாசம் செய்கிறாரே

    தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
    தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
    தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
    கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே

    தேவ ஆலயமும் அவரே
    தூய ஒளிவிளக்கும் அவரே
    ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
    சுத்த ஜீவநதியும் அவரே

    மகிமை நிறை பூரணமே
    மகா பரிசுத்த ஸ்தலமதுவே
    என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
    எங்கள் பாதங்கள் நிற்கிறதே

    சீயோனே உன் வாசல்களை
    ஜீவ தேவனே நேசிக்கிறார்
    சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
    கூறி உயர்த்திடுவோம் உம்மையே

    முன்னோடியாய் இயேசு பரன்
    மூலைக்கல்லாகி சீயோனிலே
    வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
    வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்


    Itho Manusharin Maththiyil Thaevaathi Thaevanae
    Vaasam Seykiraarae

    Thaevan Thaaparikkum Sthalamae
    Tham Janaththaarin Maththiyilaam
    Thaevan Thaam Avarkal Thaevanaayirunthae
    Kannnneer Yaavaiyum Thutaikkiraarae

    Thaeva Aalayamum Avarae
    Thooya Olivilakkum Avarae
    Jeevanaalae Tham Janangalin Thaakam Theerkkum
    Suththa Jeevanathiyum Avarae

    Makimai Nirai Pooranamae
    Makaa Parisuththa Sthalamathuvae
    Entum Thuthiyudanae Athan Vaasal Ullae
    Engal Paathangal Nirkirathae

    Seeyonae Un Vaasalkalai
    Jeeva Thaevanae Naesikkiraar
    Seer Mikunthidumey Suviseshanthanai
    Koori Uyarththiduvom Ummaiyae

    Munnotiyaay Yesu Paran
    Moolaikkallaaki Seeyonilae
    Vaasanj Seythidum Unnatha Sikaramathai
    Vaanjaiyodu Naam Naadiduvom

    Idho Manusharin Mathiyil - இதோ மனுஷரின் மத்தியில் Idho Manusharin Mathiyil - இதோ மனுஷரின் மத்தியில் Reviewed by Christking on August 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.