Immanuvelin Rathathal Niraintha - இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த - Christking - Lyrics

    Immanuvelin Rathathal Niraintha - இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த


    1. இம்மானுவேலின் இரத்தத்தால்
    நிறைந்த ஊற்றுண்டே
    எப்பாவத் தீங்கும் அதினால்
    நிவிர்த்தியாகுமே

    நான் நம்புவேன் ! நான் நம்புவேன் !
    இயேசு எனக்காய் மரித்தார் – மரித்தார்
    பாவம் நீங்கச் சிலுவையில் உதிரம் சிந்தினார்
    தேவனைத் துதியுங்கள்

    2. மா பாவியான கள்ளனும்
    அவ்வூற்றில் மூழ்கினான்
    மன்னிப்பும் மோட்சானந்தமும்
    அடைந்து பூரித்தான் — நான்

    3. அவ்வாறே நானும் யேசுவால்
    விமோசனம் பெற்றேன்
    என் பாவம் நீங்கிப் போனதால்
    ஓயாமல் பாடுவேன் — நான்

    4. காயத்தில் ஓடும் ரத்தத்தை
    விஸ்வாசத்தால் கண்டேன்
    ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
    எங்கும் பிரஸ்தாபிப்பேன் — நான்

    5. பின் விண்ணில் வல்ல நாதரை
    நான் கண்டு பூரிப்பேன்
    அங்கென்னை மீட்ட நேசத்தைக்
    கொண்டாடிப் போற்றுவேன் — நான்


    1. Immaanuvaelin Iraththaththaal
    Niraintha Oottunntae
    Eppaavath Theengum Athinaal
    Nivirththiyaakumae

    Naan Nampuvaen ! Naan Nampuvaen !
    Yesu Enakkaay Mariththaar – Mariththaar
    Paavam Neengach Siluvaiyil Uthiram Sinthinaar
    Thaevanaith Thuthiyungal

    2. Maa Paaviyaana Kallanum
    Avvoottil Moolkinaan
    Mannippum Motchananthamum
    Atainthu Pooriththaan — Naan

    3. Avvaatae Naanum Yaesuvaal
    Vimosanam Petten
    En Paavam Neengip Ponathaal
    Oyaamal Paaduvaen — Naan

    4. Kaayaththil Odum Raththaththai
    Visvaasaththaal Kanntaen
    Oppatta Meetpar Naesaththai
    Engum Pirasthaapippaen — Naan

    5. Pin Vinnnnil Valla Naatharai
    Naan Kanndu Poorippaen
    Angannai Meetta Naesaththaik
    Konndaatip Pottuvaen — Naan

    Immanuvelin Rathathal Niraintha - இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த Immanuvelin Rathathal Niraintha - இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த Reviewed by Christking on August 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.