Intaiththinam Un Arul Eekuvaay - இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் - Christking - Lyrics

    Intaiththinam Un Arul Eekuvaay - இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்


    இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் , இயேசுநாதையா ,
    இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

    அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை
    வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு — இன்றை

    1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய் – பலவிதமாம்
    பொல்லா மோசங்களில் தற்காத்தாய் ;
    ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி ,
    ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய் — இன்றை

    2. கையிட்டுக் கொள்ளும் , என்றன் வேலை – யாவிலுமுன்றன்
    கடைக்கண் ணோக்கி , அவற்றின் மேலே ,
    ஐயா , நின் ஆசீர்வாதம் அருளி , என் மனோவாக்கு
    மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக — இன்றை

    3. எத்தனையோ விபத்தோர் நாளே – தஞ்சம் நீ என
    எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே ;
    பத்தர் பாலனா , எனைப் பண்பாய் ஒப்புவித்தேன் , உன்
    சித்தம் எனது பாக்கியம் , தேவ திருக்குமாரா — இன்றை

    4. பாவ சோதனைகளை வென்று , பேயுலகுடல்
    பண்ணும் போர்களுக் கெதிர் நின்று ,
    ஜீவ பாதையில் இன்றும் திடனாய் முன்னிட்டுச் செல்ல ,
    தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து — இன்றை


    Intaiththinam Un Arul Eekuvaay , Yesunaathaiyaa ,
    Intaiththinam Un Arul Eekuvaay

    Antun Uthiram Narark Kentu Sinthi Meettenai
    Ventiyudan Ratchiththa Nanti Polae Enakku — Intai

    1. Pona Raavil Ennaik Kann Paarththaay – Palavithamaam
    Pollaa Mosangalil Tharkaaththaay ;
    Eena Saaththaan Enaiyae Idarkkul Akappaduththi ,
    Oonam Enakkuch Seyyaa Thurukkamudan Puranthaay — Intai

    2. Kaiyittuk Kollum , Entan Vaelai – Yaavilumuntan
    Kataikkann Nnokki , Avattin Maelae ,
    Aiyaa , Nin Aaseervaatham Aruli , en Manovaakku
    Meyyaal Nin Makimaiyae Vilangumpati Oluka — Intai

    3. Eththanaiyo Vipaththor Naalae – Thanjam Nee Ena
    Eliyaen Atainthaen Untan Thaalae ;
    Paththar Paalanaa , Enaip Pannpaay Oppuviththaen , Un
    Siththam Enathu Paakkiyam , Thaeva Thirukkumaaraa — Intai

    4. Paava Sothanaikalai Ventu , Paeyulakudal
    Pannnum Porkaluk Kethir Nintu ,
    Jeeva Paathaiyil Intum Thidanaay Munnittuch Sella ,
    Thaeva Sarvaayuthaththaich Sirakka Enak Kaliththu — Intai

    Intaiththinam Un Arul Eekuvaay - இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் Intaiththinam Un Arul Eekuvaay - இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் Reviewed by Christking on August 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.