Intha Mangalam Selikkavae - இந்த மங்களம் செழிக்கவே - Christking - Lyrics

    Intha Mangalam Selikkavae - இந்த மங்களம் செழிக்கவே


    இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
    எங்கள் திரித்துவ தேவனே
    சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
    கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

    1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
    ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
    நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
    நிற்க உலகத்தில் விடுத்தாய்
    மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
    ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த

    2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
    துக்குள் எலியேசா் கொண்டனன்
    முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
    சக்கியமதாகக் கண்டனன்
    பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
    தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல

    3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
    சுத்த சுவிசேட நேசனே
    பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
    அற்ற கிறிஸ்தேசுராஜனே
    வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
    புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்


    Intha Mangalam Selikkavae – Kirupai Seyyum
    Engal Thiriththuva Thaevanae
    Suntharak Kaanaavin Manappanthalil Sentam Manaththai
    Kantharasamaakach Seytha Vinthai Pol, Ingaeyum Vanthu

    1. Aathiththoduth Thanpai Eduththaay Manudarthammai
    Aanum Pennnumaakap Pataiththaay
    Neethi Varam Naalungaduththaay – Pettup Peruki
    Nirka Ulakaththil Viduththaay
    Maathavaa் Panniyum Vaetha Pothanae Anthappati Un
    Aatharavaik Konndu Athan Neethiyai Nampippurintha

    2. Thakka Aapirakaamum Vinndanan – Athanai Mana
    Thukkul Eliyaesaa் Konndanan
    Mukya Aaraan Nilaththanntinan – Ninaiththapati
    Sakkiyamathaakak Kanndanan
    Pakkuvam Uraiththidaa Repaekkaalum Eesaakkuvukku
    Thakka Manavaaliyaakath Thanthu Thayai Seythaarpola

    3. Saththiya Vaethaththin Vaasanae – Arulupari
    Suththa Suviseda Naesanae
    Paktharkal Pava Vimosanae – Paluthanuvum
    Atta Kiristhaesuraajanae
    Vettiyaal Yaakkopuvukku Muttilum Aliththa Paeraay
    Puththira Sampanthunndaakki Niththiya Supa Sopanamaay

    Intha Mangalam Selikkavae - இந்த மங்களம் செழிக்கவே Intha Mangalam Selikkavae - இந்த மங்களம் செழிக்கவே Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.