Ippoethum Eppoethum - இப்போதும் எப்போதும்

    Ippoethum Eppoethum - இப்போதும் எப்போதும்


    இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
    தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்

    துதிபலி சுகந்த வாசைன
    நன்றி பலி அது உகந்த காணிக்கை

    1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
    தேவனின் கிருபையே பிரசன்னமானீரே
    துதிக்கிறேன் தூயவரே போற்றுகிறேன் புண்ணியரே

    2. தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்
    வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே

    3. நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
    நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா

    4. தேவ பக்தியுடன் தெளிந்த புத்தியோடு
    இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்

    5. சொந்த மகனாக தூய்மையாக்கிடவே
    உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே

    6. மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்
    இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்

    7. நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்
    நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப்பரிசாக


    Ippothum Eppothum Ellaavattirkaakavum
    Thanthaiyaam Kadavulukku Thuthipali Seluththiduvom

    Thuthipali Sukantha Vaasaina
    Nanti Pali Athu Ukantha Kaannikkai

    1. Ellaa Manitharukkum Iratchippu Tharukinta
    Thaevanin Kirupaiyae Pirasannamaaneerae
    Thuthikkiraen Thooyavarae Pottukiraen Punnnniyarae

    2. Theeya Naattangal Ulakusaarnthavaikal
    Verukkach Seytheerae Vettiyum Thantheerae

    3. Nerikaedu Anaiththinintum Meetpu Thantheerayyaa
    Narseyal Seyvatharku Aarvam Thantheerayyaa

    4. Thaeva Pakthiyudan Thelintha Puththiyodu
    Immaiyil Vaalvatharku Payirsi Tharukinteer

    5. Sontha Makanaaka Thooymaiyaakkidavae
    Ummaiyae Paliyaaka Oppataiththeer Siluvaiyilae

    6. Marujenma Mulukkinaalum Puthithaakkum Aaviyaalum
    Iratchiththuk Kaluvineerae Mikuntha Irakkaththinaal

    7. Neethimaan Aakkineerae Umathu Kirupaiyinaal
    Niththiya Jeevan Thantheerae Nirantharapparisaaka

    Ippoethum Eppoethum - இப்போதும் எப்போதும்  Ippoethum Eppoethum - இப்போதும் எப்போதும் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.