Iraivanai Nambi Irukkiraen - இறைவனை நம்பியிருக்கிறேன் - Christking - Lyrics

    Iraivanai Nambi Irukkiraen - இறைவனை நம்பியிருக்கிறேன்


    இறைவனை நம்பியிருக்கிறேன்
    எதற்கும் பயப்படேன்
    இவ்வுலகம் எனக்கெதிராய்
    என்ன செய்ய முடியும்

    பயம் என்னை ஆட்கொண்டால்
    பாடுவேன் அதிகமாய்
    திருவசனம் தியானம் செய்து
    ஜெயமெடுப்பேன் நிச்சயமாய்

    அச்சம் மேற்கொள்ளாது
    இறை அமைதி என்னை காக்கும்
    இவ்வுலகம் எனக்கெதிராய்
    என்ன செய்ய முடியும்

    என் சார்பில் இருக்கின்றீர்
    என்பதை நான் அறிந்து கொண்டேன்
    எதிராக செயல்படுவோர்
    திரும்புவார்கள் பின்னிட்டு – அச்சம்

    சாவினின்று என் உயிரை
    மீட்டீரே கிருபையினால்
    உம்மோடு நடந்திடுவேன்
    உயிர்வாமும் நாட்களெல்லாம்

    துயரங்களின் எண்ணிக்கையை
    கணக்கெடுக்கும் தகப்பன் நீர் -என்
    கண்ணீரைத் தோற்பையில்
    சேர்த்து வைத்துப் பதில் தருவீர்

    மறக்கவில்லை என் பொருத்தனைகள்
    செலுத்துகிறேன் நன்றி பலி
    காலடிகள் இடறாமல்
    காத்தீரே நன்றி ஜயா


    Iraivanai Nampiyirukkiraen
    Etharkum Payappataen
    Ivvulakam Enakkethiraay
    Enna Seyya Mutiyum

    Payam Ennai Aatkonndaal
    Paaduvaen Athikamaay
    Thiruvasanam Thiyaanam Seythu
    Jeyameduppaen Nichchayamaay

    Achcham Maerkollaathu
    Irai Amaithi Ennai Kaakkum
    Ivvulakam Enakkethiraay
    Enna Seyya Mutiyum

    En Saarpil Irukkinteer
    Enpathai Naan Arinthu Konntaen
    Ethiraaka Seyalpaduvor
    Thirumpuvaarkal Pinnittu – Achcham

    Saavinintu en Uyirai
    Meettirae Kirupaiyinaal
    Ummodu Nadanthiduvaen
    Uyirvaamum Naatkalellaam

    Thuyarangalin Ennnnikkaiyai
    Kanakkedukkum Thakappan Neer -en
    Kannnneeraith Thorpaiyil
    Serththu Vaiththup Pathil Tharuveer

    Marakkavillai en Poruththanaikal
    Seluththukiraen Nanti Pali
    Kaalatikal Idaraamal
    Kaaththeerae Nanti Jayaa

    Iraivanai Nambi Irukkiraen - இறைவனை நம்பியிருக்கிறேன் Iraivanai Nambi Irukkiraen - இறைவனை நம்பியிருக்கிறேன் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.