Irangume en Yesuve - இரங்குமே என் இயேசுவே - Christking - Lyrics

Irangume en Yesuve - இரங்குமே என் இயேசுவே


இரங்குமே என் இயேசுவே
இரக்கத்தின் ஐஸ்வரியமே
கூவி கதறியே ராவும் பகலுமே
கெஞ்சும் ஜெபம் கேளுமே

நித்தம் எமக்காய் பரிந்து பேசும்
நள்ளிரவின் நண்பனே – அன்பின்
பிதா முன்னில் இன்று ஜெபித்திடும்
அன்பர் ஜெபங்கேளுமே

அன்று நினிவே அழிவைக் கண்டே
அன்பே இரங்கினீரே – யோனா
உரைத்த தம் ஆலோசனை தந்து
ஏழை ஜெபங்கேளுமே

எத்தனை துன்பம் சகித்து மீட்டீர்
எல்லாமே வீணாகுமோ
அத்தி மரத்திற்கு அன்று இரங்கினீர்
அந்த ஜெபங்கேளுமே

சோதனையினின்று இரட்சித்தீரே
சோதோமின் பக்தனையே
ஆபிரகாம் அன்று வேண்டி ஜெபித்ததோர்
ஆதி ஜெபங்கேளுமே

தாரும் உயிர் மீட்சி சபைதனில்
சோரும் உள்ளம் மீளவே
கர்த்தாவே உம் ஜனம் செத்த நிலை மாற
பக்தர் ஜெபங்கேளுமே


Irangumae en Yesuvae
Irakkaththin Aisvariyamae
Koovi Kathariyae Raavum Pakalumae
Kenjum Jepam Kaelumae

Niththam Emakkaay Parinthu Paesum
Nalliravin Nannpanae – Anpin
Pithaa Munnil Intu Jepiththidum
Anpar Jepangaelumae

Antu Ninivae Alivaik Kanntae
Anpae Irangineerae – Yonaa
Uraiththa Tham Aalosanai Thanthu
Aelai Jepangaelumae

Eththanai Thunpam Sakiththu Meettir
Ellaamae Veennaakumo
Aththi Maraththirku Antu Irangineer
Antha Jepangaelumae

Sothanaiyinintu Iratchiththeerae
Sothomin Pakthanaiyae
Aapirakaam Antu Vaennti Jepiththathor
Aathi Jepangaelumae

Thaarum Uyir Meetchi Sapaithanil
Sorum Ullam Meelavae
Karththaavae Um Janam Seththa Nilai Maara
Pakthar Jepangaelumae

Irangume en Yesuve - இரங்குமே என் இயேசுவே Irangume en Yesuve - இரங்குமே என் இயேசுவே Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.