Isravelin Thuthigul Vasam - இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் - Christking - Lyrics

    Isravelin Thuthigul Vasam - இஸ்ரவேலின் துதிக்குள் வாசம்


    இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனே
    இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே
    இறங்கி வந்திடுமே

    உம் வாசல்களில் துதியோடும்
    உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்
    உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்
    உம் நாமத்தை ஒருமித்துமே
    உயர்த்தியே போற்றுகிறோம்

    இஸ்ரவேலின் எக்காளம் மகா
    ஆரவாரத்தின் முழக்கத்தின் முன்
    எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல்
    இப்போ சத்துருவின் கோட்டைகளை
    இடித்து தகர்த்திடுமே

    எதைக் குறித்தும் கவலைப்படாமல்
    எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள் என்றீர்
    ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு
    இப்போ எல்லா புத்திக்கும் மேலான
    உம் சமாதானம் ஈந்திடுமே

    ஆசாரியர் லேவியிர் ஒருமித்தும்மை
    ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே
    ஆலயம் மகிமையால் நிரம்பினது போல
    ஆலயமாய் எம்மை பூவில் காண
    உம் மகிமையால் நிரப்பிடுமே

    உம் கிருபையின் மகிமைக்குமே
    எம்மை புகழ்ச்சியாய் முன் குறித்தீர்
    எம் சுதந்திரத்தின் அச்சாரமாக
    எம்மை மீட்கவே முத்தரித்தீரே
    எம் ஆவியானவரால்


    Isravaelin Thuthikkul Vaasam Pannnum Thaevanae
    Innaeram Atiyaarin Thuthikal Maththiyilae
    Irangi Vanthidumae

    Um Vaasalkalil Thuthiyodum
    Um Pirakaaraththil Pukalchchiyodum
    Ummaith Thuthiththidavae Piravaesiththittam
    Um Naamaththai Orumiththumae
    Uyarththiyae Pottukirom

    Isravaelin Ekkaalam Makaa
    Aaravaaraththin Mulakkaththin Mun
    Erikovin Alangam Veelnthathu Pol
    Ippo Saththuruvin Kottakalai
    Itiththu Thakarththidumae

    Ethaik Kuriththum Kavalaippadaamal
    Ellaa Vinnnappamum Aeradungal Enteer
    Sthoththira Jepa Vaennduthalodu
    Ippo Ellaa Puththikkum Maelaana
    Um Samaathaanam Eenthidumae

    Aasaariyar Laeviyir Orumiththummai
    Aeka Saththamaay Thuthiththup Paatidavae
    Aalayam Makimaiyaal Nirampinathu Pola
    Aalayamaay Emmai Poovil Kaana
    Um Makimaiyaal Nirappidumae

    Um Kirupaiyin Makimaikkumae
    Emmai Pukalchchiyaay Mun Kuriththeer
    Em Suthanthiraththin Achcharamaaka
    Emmai Meetkavae Muththariththeerae
    Em Aaviyaanavaraal

    Isravelin Thuthigul Vasam - இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் Isravelin Thuthigul Vasam - இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.