Iyaesu Enkal Maeyppar - இயேசு எங்கள் மேய்ப்பர் - Christking - Lyrics

    Iyaesu Enkal Maeyppar - இயேசு எங்கள் மேய்ப்பர்


    1. இயேசு எங்கள் மேய்ப்பர் கண்ணீர் துடைப்பார்
    மார்பில் சேர்த்தணைத்து பயம் நீக்குவார்
    துன்பம் நேரிட்டாலும்ää இன்பம் ஆயினும்
    இயேசுவின்பின் செல்வோம் பாலர் யாவரும்.

    2. நல்ல மேய்ப்பர் சத்தம் நன்றாய் அறிவோம்
    காதுக்கின்பமாக கேட்டுக் களிப்போம்
    கண்டித்தாலும் நேசர் ஆற்றித் தேற்றுவார்
    நாங்கள் பின்னே செல்ல வழி காட்டுவார்.

    3. ஆட்டுக்காக மேய்ப்பர் இரத்தம் சிந்தினார்
    அதில் மூழ்கினோரே தூயர் ஆகுவார்
    பாவ குணம் நீக்கி முற்றும் இரட்சிப்பார்
    திவ்விய தூய சாயல் ஆக மாற்றுவார்.

    4. இயேசு நல்ல மேய்ப்பர் ஆட்டைப் போஷிப்பார்
    ஓனாய்கள் வந்தாலும் தொடவே மாட்டார்
    சாவின் பள்ளத்தாக்கில் அஞ்சவே மாட்டோம்
    பாதாளத்தின்மேலும் ஜெயங்கொள்ளுவோம்.


    1. Yesu Engal Maeyppar Kannnneer Thutaippaar
    Maarpil Serththannaiththu Payam Neekkuvaar
    Thunpam Naerittalumää Inpam Aayinum
    Yesuvinpin Selvom Paalar Yaavarum.

    2. Nalla Maeyppar Saththam Nantay Arivom
    Kaathukkinpamaaka Kaettuk Kalippom
    Kanntiththaalum Naesar Aattith Thaettuvaar
    Naangal Pinnae Sella Vali Kaattuvaar.

    3. Aattukkaaka Maeyppar Iraththam Sinthinaar
    Athil Moolkinorae Thooyar Aakuvaar
    Paava Kunam Neekki Muttum Iratchippaar
    Thivviya Thooya Saayal Aaka Maattuvaar.

    4. Yesu Nalla Maeyppar Aattap Poshippaar
    Onaaykal Vanthaalum Thodavae Maattar
    Saavin Pallaththaakkil Anjavae Maattam
    Paathaalaththinmaelum Jeyangalluvom.

    Iyaesu Enkal Maeyppar - இயேசு எங்கள் மேய்ப்பர்  Iyaesu Enkal Maeyppar - இயேசு எங்கள் மேய்ப்பர் Reviewed by Christking on August 31, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.