Anbe Anbe En Nenjukkul - அன்பே அன்பே | SPB Christian Song
Song | Anbe Anbe |
Album | Single |
Lyrics | N/A |
Music | N/A |
Sung by | SPB |
- Tamil Lyrics
- English Lyrics
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ வா
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா
எழை எந்தன் என் உள்ளம் நீ வா
எங்கும் எந்தன் தாகம் தீர்க்க வா
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா
அன்பே அன்பே
தாய்ப்போல என்னை தாலாட்டுப்பாடி
சேயாக நீயும் சீறாட்டினாய்
நீர்த்தேடிச்செல்லும் மான்போல நானும்
உன்பாதம் சேர வழிகாட்டினாய்
நீயில்லை என்றால் நானும் இல்லையே
நீயின்றிபோனால் வாழ்வும் இல்லையே
நீதானே எந்தன் வாழ்வின் செல்வமே
நீயின்றி வாழ்வில் எல்லாம் சோகமே
வீழ்கின்ற நேரங்கள் விதையாக மடிந்தாலும்
எழுகின்ற நேரங்கள் புதுவாழ்வின் பாதைகள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா
நிலவென்னும் கண்கள் நீர்பூக்கும் வேலை
நிலமாக நின்று தாங்கிக்கொள்வாய்
மலர்சோலை நானும் மலராது போனால்
மழையாக என்னில் வளம் சேர்க்க வா
நீயில்லை என்றால் இன்பம் சேருமா
நீ என்னுள் சேர்ந்தால் சோகம் தங்குமா
நீயில்லை என்றால் கீதம் தோன்றுமா
நீ என்னுள் சேர்ந்தால் பேதம் வேண்டுமா
என் வாழ்வில் எல்லாமே
நீ தந்த செல்வங்கள்
என்வாழ்வில் துன்பங்கள்
நீர் பூத்த வானங்கள்
வாழ்வென்னும் பாடம் கற்றுத் தா - 2
அன்பே அன்பே என் நெஞ்சுக்குள் நீ
அன்பால் நெஞ்சம் ஆளச்சொல்லித் தா
English
S. P. Balasubrahmanyam Tamil Christian Songs
Anbe Anbe En Nenjukkul - அன்பே அன்பே | SPB Christian Song
Reviewed by Christking
on
September 27, 2020
Rating:
No comments: