Yarusaleme - எருசலேமே | S. P. Balasubrahmanyam, S janaki - Christking - Lyrics

    Yarusaleme - எருசலேமே | S. P. Balasubrahmanyam, S janaki



    எருசலேமே எருசலேமே
    யாரை இழந்து அழுகிறாய்
    மானிடர் தாகம் தீர்க்கவோ சாபம்
    சிலுவை மரத்தில் தொங்கினீர்-2

    1.தூய தேகத்தில் ஆணி அடிக்க
    கடலும் காற்றும் கலங்குதே-2
    விண்ணின் மகனே முள்முடி சிரசோ ?
    படைத்த தேவனே உனக்கே சிறையா ?
    பரத்தின் கட்டளையா ? - எருசலேமே

    2.பாவலோகத்தை நாடி வந்து
    எங்கும் நாக்கும் நடுங்குதே-2
    கதிரவன் ஒளிக்கு களங்கம் ஏனோ ?
    முகாரி வாழ பூபாளம் வீழ்வதா ?
    முதல்வன் முழக்கமிதா ? - எருசலேமே

    ---------------------------------------------------------- கண்மணியே விண்மணியே
    பொன்மணி இயேசுவே-2
    ஆதியில்லா அந்தமில்லா
    அற்புத பாலகனே...
    மனுமகனே வா..வா.. வா வா.. வா...-2

    1.தேவனருள் துணையாக
    தேனமுதின் விருந்தாக
    வாழும் கிறிஸ்மஸ் இனிதாகும்
    அன்னை மேரி தந்தை யோசேப்பு
    தியாகம் செய்திடவே-2

    அஞ்ஞான இருள் நீக்க வந்தாய்
    மெய் ஞான வழி காட்டவே
    மண்ணில் வந்து என்னில் மலர்ந்தாய்
    நான் உன்னை தாலாட்டவே-கண்மணியே

    2.நீ வருக என்னை தேட
    நாள் முழுதும் உன்னை பாட
    நன்றியை நீ ஏற்க
    உயிரும் உடலும்
    பொன்னும் பொருளும்
    யாவும் நீ அல்லவா-2

    வாழ்ந்தாலும் உன்னோடு வாழ
    மறைந்தாலும் உன்னில் சேர
    தருவேன் என்னை பெறுவேன் உன்னை
    நான் உந்தன் நிழலாகவே-கண்மணியே


    English


    Yarusaleme - எருசலேமே | S. P. Balasubrahmanyam, S janaki Yarusaleme - எருசலேமே | S. P. Balasubrahmanyam, S  janaki Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.