Enthan Ragam - எந்தன் இராகம் | Tony Thomas - Christking - Lyrics

    Enthan Ragam - எந்தன் இராகம் | Tony Thomas



    எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட
    எந்தன் மூச்சு உம் வார்த்தை பேசிட-2
    உங்க அன்பு நினைக்கையில்
    என் உள்ளம் பொங்குதே
    உங்க தியாகம் நினைக்கையில்
    நன்றியால் பாடுவேன்- எந்தன் இராகம்

    1.ஆகாதவன் என்று பலர் தள்ளிவிட்டார்கள்
    ஆனாலும் நீங்க என்னை தெரிந்துகொண்டீரே
    வாக்குப்பண்ணினவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள்
    வாக்குத்தத்தம் தந்து என்னை உயர்த்தினீரே-எந்தன் இராகம்

    2.சிறக்கில்லா பறவை போல அலைந்தபோதெல்லாம்
    உமது கரம் கொண்டு தாங்கினீரய்யா
    வாழ்வே மாயம் என்று விரக்தி அடைந்த போது
    புதிய வழியை காட்டி நடக்க செய்தீரே-எந்தன் இராகம்

    3.என்னையே உமக்காக தந்தேன் இராஜா
    என்னை முற்றிலுமாய் பயன்படுத்துமே
    சிலுவையில் எனக்காக வெற்றி சிறந்தவர்
    உம்மோடு வாழ எனக்கு ஆசை இராஜா-எந்தன் இராகம்


    English


    Enthan Ragam - எந்தன் இராகம் | Tony Thomas Enthan Ragam - எந்தன் இராகம் | Tony Thomas Reviewed by Christking on September 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.