Iyaesuvin Anpinai Ariviththita - இயேசுவின் அன்பினை அறிவித்திட - Christking - Lyrics

    Iyaesuvin Anpinai Ariviththita - இயேசுவின் அன்பினை அறிவித்திட


    இயேசுவின் அன்பினை அறிவித்திட
    இணைந்தே செயல்படுவோம்
    சுவிசேஷ நற்செய்தி கூறிட
    விரைந்தே புறப்படுவோம்

    நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
    நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
    இயேசுவை அறியட்டுமே

    1. நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்
    தீர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்
    இலட்சத்திற்காக பரிதபித்தார்
    கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம்

    2. இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்
    பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்
    திறப்பில் நின்று தடுத்திடுவோம்
    ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம்

    3. காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே
    இயேசுவின் வருகை இன்று அதி சமீபமாகிறதே
    இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
    நற்செய்தி சுமந்து புறப்படுவோம் – நம் பாரதம்


    Yesuvin Anpinai Ariviththida
    Innainthae Seyalpaduvom
    Suvisesha Narseythi Koorida
    Virainthae Purappaduvom

    Nam Paaratham Nam Thaayakam Karththarai Ariyattumae
    Nam Thaay Mannnum Nam Thalaimuraiyum
    Yesuvai Ariyattumae

    1. Ninivaeyin Janangalukkaaka Nam Thaevan Parithaviththaar
    Theerkkan Yonaavaiyo Avar Anuppi Echchariththaar
    Ilatchaththirkaaka Parithapiththaar
    Kotikatkaaka Kalangidaaro? – Nam Paaratham

    2. Imaikkum Noti Poluthilae Mariththidum Maantharaip Paar
    Paava Mannippinti Aakkinai Ataivathai Paar
    Thirappil Nintu Thaduththiduvom
    Jepikkum Makkalaith Thiratdiduvom – Nam Paaratham

    3. Kaalam Kadanthiduthae Nam Vaethamum Niraivaeruthae
    Yesuvin Varukai Intu Athi Sameepamaakirathae
    Ilainjar Koottam Yesuvukkaay
    Narseythi Sumanthu Purappaduvom – Nam Paaratham

    Iyaesuvin Anpinai Ariviththita - இயேசுவின் அன்பினை அறிவித்திட Iyaesuvin Anpinai Ariviththita - இயேசுவின் அன்பினை அறிவித்திட Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.