Iyare Neer Thangum - ஐயரே நீர் தங்கும் - Christking - Lyrics

    Iyare Neer Thangum - ஐயரே நீர் தங்கும்


    ஐயரே நீர் தங்கும் என்னிடம்
    ஐயரே நீர் தங்கும் – இப்போது
    அந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சே
    ஐயா நீர் இரங்கும்

    பகல்முழுதுங் காத்தீர் சென்ற
    பகல்முழுதுங் காத்தீர் -தோத்திரம்
    பரமனே இந்த இரவிலும் வாரும்
    பாவியை நீர் காரும்

    தங்கா தொரு பொருளும் என்னிடம்
    தங்கா தொரு பொருளும் -யேசு
    தற்பரனே நீர் ஒருவரேயென்னில்
    தங்கித் தயைபுரியும்

    உயிரே துமையன்றிப் பாவிக்
    குயிரே துமையன்றி – என்றன்
    உடல் உயிர் உம்மால் உய்கிறதையா
    உத்தமனே தங்கும்

    நீர் தங்கிடும் வீட்டில் யேசுவே
    நீர் தங்கிடும் வீட்டில் -எல்லாம்
    நிறைவே குறைவுண்டாமோ கர்த்தா
    நின்னை விடமாட்டேன்

    என்பாவம் மனியும் இறையே
    என்பாவம் மனியும் – அப்போது
    எளியேன் உம்மோடபீயர்வேன் இரவில்
    எனக்கோர் திகிலேது?

    எனக்கு நீர்காவல் என்றும்
    எனக்கு நீர்காவல் – என்றன்
    இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர்
    எல்லவர்க்குங் காவல்

    உம்மோடே படுப்பேன் ஐயா
    உம்மோடே படுப்பேன் – இரவில்
    உம்மோடேயர்வேன் சேதமில்லாமல்
    உம்மோடெழுந்திருப்பேன்


    Aiyarae Neer Thangum Ennidam
    Aiyarae Neer Thangum – Ippothu
    Anthi Naeram Polu Thasthamiththaachcha
    Aiyaa Neer Irangum

    Pakalmuluthung Kaaththeer Senta
    Pakalmuluthung Kaaththeer -thoththiram
    Paramanae Intha Iravilum Vaarum
    Paaviyai Neer Kaarum

    Thangaa Thoru Porulum Ennidam
    Thangaa Thoru Porulum -yaesu
    Tharparanae Neer Oruvaraeyennil
    Thangith Thayaipuriyum

    Uyirae Thumaiyantip Paavik
    Kuyirae Thumaiyanti – Entan
    Udal Uyir Ummaal Uykirathaiyaa
    Uththamanae Thangum

    Neer Thangidum Veettil Yaesuvae
    Neer Thangidum Veettil -ellaam
    Niraivae Kuraivunndaamo Karththaa
    Ninnai Vidamaattaen

    Enpaavam Maniyum Iraiyae
    Enpaavam Maniyum – Appothu
    Eliyaen Ummodapeeyarvaen Iravil
    Enakkor Thikilaethu?

    Enakku Neerkaaval Entum
    Enakku Neerkaaval – Entan
    Inaththaar Janaththaar Eliyor Valiyor
    Ellavarkkung Kaaval

    Ummotae Paduppaen Aiyaa
    Ummotae Paduppaen – Iravil
    Ummotaeyarvaen Sethamillaamal
    Ummodelunthiruppaen

    Iyare Neer Thangum - ஐயரே நீர் தங்கும் Iyare Neer Thangum - ஐயரே நீர் தங்கும் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.