Iyesu umthainthu kaayam - இயேசு உமதைந்து காயம் - Christking - Lyrics

    Iyesu umthainthu kaayam - இயேசு உமதைந்து காயம்


    இயேசு உமதைந்து காயம்
    நோவும் சாவும் எனக்கு
    எந்தப் போரிலும் சகாயம்
    ஆறுதலுமாவது
    உம்முடைய வாதையின்
    நினைவு என் மனதின்
    இச்சை மாளுவதற்காக
    என்னிலே தரிப்பதாக

    லோகம் தன் சந்தோஷமான
    நகர வழியிலே
    என்னைக் கூட்டிக்கொள்வதான
    மோசத்தில் நான் இயேசுவே
    உமது வியாகுல
    பாரத்தைத் தியானிக்க
    என் இதயத்தை அசையும்
    அப்போ மோசங்கள்கலையும்

    எந்தச் சமயத்திலேயும்
    உம்முடைய காயங்கள்
    எனக்க நுகூலம் செய்யும்
    என்பதே என் ஆறுதல்
    ஏனெனில் நீர் எனக்கு
    பதிலாய் மரித்தது
    என்னை எந்த அவதிக்கும்
    நீங்கலாக்கி விடுவிக்கும்

    நீர் மரித்ததால் ஓர்க்காலும்
    சாவை ருசிபாரேனே
    இதை முழு மனதாலும்
    நான் நம்பட்டும் இயேசுவே
    உமது அவஸ்தையும்
    சாவின் வேதனைகளும்
    நான் பிழைக்கிறதற்காக
    எனக்குப் பலிப்பதாக

    இயேசு உமதைந்துகாயம்
    நோவும் சாவும் எனக்கு
    எந்தப் போரிலும் சகாயம்
    ஆறுதலுமாவது
    முடிவில் விசேஷமாய்
    என்னை மீட்ட மீட்பராய்
    என்னை ஆதரித்தன்பாக
    அங்கே சேர்த்துக் கொள் வீராக.


    Yesu Umathainthu Kaayam
    Nnovum Saavum Enakku
    Enthap Porilum Sakaayam
    Aaruthalumaavathu
    Ummutaiya Vaathaiyin
    Ninaivu en Manathin
    Ichcha Maaluvatharkaaka
    Ennilae Tharippathaaka

    Lokam Than Santhoshamaana
    Nakara Valiyilae
    Ennaik Koottikkolvathaana
    Mosaththil Naan Yesuvae
    Umathu Viyaakula
    Paaraththaith Thiyaanikka
    En Ithayaththai Asaiyum
    Appo Mosangalkalaiyum

    Enthach Samayaththilaeyum
    Ummutaiya Kaayangal
    Enakka Nukoolam Seyyum
    Enpathae en Aaruthal
    Aenenil Neer Enakku
    Pathilaay Mariththathu
    Ennai Entha Avathikkum
    Neengalaakki Viduvikkum

    Neer Mariththathaal Orkkaalum
    Saavai Rusipaaraenae
    Ithai Mulu Manathaalum
    Naan Nampattum Yesuvae
    Umathu Avasthaiyum
    Saavin Vaethanaikalum
    Naan Pilaikkiratharkaaka
    Enakkup Palippathaaka

    Yesu Umathainthukaayam
    Nnovum Saavum Enakku
    Enthap Porilum Sakaayam
    Aaruthalumaavathu
    Mutivil Viseshamaay
    Ennai Meetta Meetparaay
    Ennai Aathariththanpaaka
    Angae Serththuk Kol Veeraaka.

    Iyesu umthainthu kaayam - இயேசு உமதைந்து காயம்  Iyesu umthainthu kaayam - இயேசு உமதைந்து காயம் Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.