Jepa Sinthai Enil Thaarum - ஜெப சிந்தை எனில் தாரும் - Christking - Lyrics

    Jepa Sinthai Enil Thaarum - ஜெப சிந்தை எனில் தாரும்


    ஜெப சிந்தை எனில் தாரும், தேவா – என்னை

    அபயமென் றுனக் குக்கை
    அளித்தேன் பொற்பாதா — ஜெப

    1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச – உல
    கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
    தொன்மை ஆயக்காரன் போலஞ்ச – பவ
    தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச — ஜெப

    2. இடைவிடாமல் செய்யும் எண்ணம் – என்
    இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,
    சடமுலகப் பேயை வெல்லும் – நற்
    சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் — ஜெப

    3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய – தகா
    நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
    பேய்க்கண மோடுபோர் செய்ய – நல்
    ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய — ஜெப


    Jepa Sinthai Enil Thaarum, Thaevaa – Ennai

    Apayamen Runak Kukkai
    Aliththaen Porpaathaa — Jepa

    1. Unnmai Manatho Dunnaik Kenja – Ula
    Kennna Mellaam Akatti Urimaiyae Minja,
    Thonmai Aayakkaaran Polanja – Pava
    Thoshamakalath Thiruraththam Ullinja — Jepa

    2. Itaividaamal Seyyum Ennnam – en
    Ithayaththil Uthayamaay Ilangidap Pannnum,
    Sadamulakap Paeyai Vellum – Nar
    Saathaka Munndaakath Thayaisey Ennullam — Jepa

    3. Ookkamudan Jepam Seyya – Thakaa
    Nnokka Mellaam Kettu Norungiyae Naiya,
    Paeykkana Modupor Seyya – Nal
    Aakkam Enil Thanthu Aekkam Theernthuyya — Jepa

    Jepa Sinthai Enil Thaarum - ஜெப சிந்தை எனில் தாரும்  Jepa Sinthai Enil Thaarum - ஜெப சிந்தை எனில் தாரும் Reviewed by Christking on September 17, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.