Kaalaththin Arumaiyai Arinthu - காலத்தின் அருமையை அறிந்து
- TAMIL
- ENGLISH
காலத்தின் அருமையை அறிந்து
வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
ஞாலத்தின் பரனுனை நாட்டின
நோக்கத்தைச்
சீலமாய் நினைத்தவர் மூலம்
பிழைத்திடுவாய் – கால
1. மதியை யிழந்து
தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம்
அறிந்திடாயோ?
கதியாம் ரஷண்ய வாழ்வைக்
கண்டு நீ மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல
காலம் என்றறியாயோ? – கால
2. இகத்தினில் ஊழியம்
அகத்தியம் நிறைவேற
ஏசுனை அழைத்தாரல்லோ
மகத்துவ வேலையை மறந்து
தூங்குவாயானால் பகற்கால
முடியும் ராக்காலத்திலென்ன
செய்வாய் ? – கால
3. நோவாவின் காலத்தில்
நூற்றிருபது ஆண்டு
நோக்கிப்பின் அழித்தாரன்றோ?
தாவாத கிருபையால்
தாங்கி உனக்களித்த
தவணையின் காலமிவ் வருட
முடியலாமே! – கால
4. முந்தி எரேமியா
அனனியாவுக் குரைத்த
முடிவை நீ யறியாயோ!
எந்தக் காலமும் சிரஞ்சீவி
யென் றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும்
இருந்திடாயோ! – கால
Kaalaththin Arumaiyai Arinthu
Vaalaavitil
Kannnneer Viduvaayae
Njaalaththin Paranunai Naattina
Nnokkaththaich
Seelamaay Ninaiththavar Moolam
Pilaiththiduvaay – Kaala
1. Mathiyai Yilanthu
Theeya Valiyilae Nee Nadanthaal
Varungapam
Arinthidaayo?
Kathiyaam Rashannya Vaalvaik
Kanndu Nee Makilnthida
Kaalam Ithuvae Nalla
Kaalam Entariyaayo? – Kaala
2. Ikaththinil Ooliyam
Akaththiyam Niraivaera
Aesunai Alaiththaarallo
Makaththuva Vaelaiyai Maranthu
Thoonguvaayaanaal Pakarkaala
Mutiyum Raakkaalaththilenna
Seyvaay ? – Kaala
3. Nnovaavin Kaalaththil
Noottirupathu Aanndu
Nnokkippin Aliththaaranto?
Thaavaatha Kirupaiyaal
Thaangi Unakkaliththa
Thavannaiyin Kaalamiv Varuda
Mutiyalaamae! – Kaala
4. Munthi Eraemiyaa
Ananiyaavuk Kuraiththa
Mutivai Nee Yariyaayo!
Enthak Kaalamum Siranjavi
Yen Rannnnidaamal
Aetta Aayaththamaay Eppothum
Irunthidaayo! – Kaala
Kaalaththin Arumaiyai Arinthu - காலத்தின் அருமையை அறிந்து
Reviewed by Christking
on
September 24, 2020
Rating:
No comments: