Kadal Kondhalithu Ponga - கடல் கொந்தளித்துப் பொங்க - Christking - Lyrics

    Kadal Kondhalithu Ponga - கடல் கொந்தளித்துப் பொங்க


    1. கடல் கொந்தளித்துப் பொங்க
    கப்பல் ஆடிச் செல்கையில்
    புயல் காற்று சீறி வீச
    பாய் கிழிந்து போகையில்
    இயேசு எங்களிடம் வந்து
    கப்பலோட்டியாயிரும்
    காற்றமைத்துத் துணை நின்று
    கரை சேரச் செய்திடும்

    2. கப்பலிலே போவோருக்கு
    கடும் மோசம் வரினும்
    இடி , மின் முழக்கம் காற்று
    உமக்கெல்லாம் அடங்கும்
    இருளில் நீர் பரஞ்சோதி
    வெயிலில் நீர் நிழலே
    யாத்திரையில் திசை காட்டி
    சாவில் எங்கள் ஜீவனே

    3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
    இன்ப துன்ப காலத்தில்
    எங்கள் ஆவி உம்மில் தங்கும்
    இகபர ஸ்தலத்தில்
    இயேசு எங்களிடம் வந்து
    கப்பலோட்டியாயிரும்
    காற்றமைத்துத் துணை நின்று
    கரை சேரச் செய்திடும்


    1. Kadal Konthaliththup Ponga
    Kappal Aatich Selkaiyil
    Puyal Kaattu Seeri Veesa
    Paay Kilinthu Pokaiyil
    Yesu Engalidam Vanthu
    Kappalottiyaayirum
    Kaattamaiththuth Thunnai Nintu
    Karai Serach Seythidum

    2. Kappalilae Povorukku
    Kadum Mosam Varinum
    Iti , Min Mulakkam Kaattu
    Umakkellaam Adangum
    Irulil Neer Paranjathi
    Veyilil Neer Nilalae
    Yaaththiraiyil Thisai Kaatti
    Saavil Engal Jeevanae

    3. Engal Ullam Ummai Nnokkum
    Inpa Thunpa Kaalaththil
    Engal Aavi Ummil Thangum
    Ikapara Sthalaththil
    Yesu Engalidam Vanthu
    Kappalottiyaayirum
    Kaattamaiththuth Thunnai Nintu
    Karai Serach Seythidum

    Kadal Kondhalithu Ponga - கடல் கொந்தளித்துப் பொங்க  Kadal Kondhalithu Ponga - கடல் கொந்தளித்துப் பொங்க Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.