Kalanguvathean Kanneer - கலங்குவதேன் கண்ணீர் - Christking - Lyrics

    Kalanguvathean Kanneer - கலங்குவதேன் கண்ணீர்


    கலங்குவதேன் கண்ணீர் விடுவதுமேன்
    நேசரின் கரங்களே தேற்றுமே
    இயேசுவின் காயங்கள் ஆற்றுமே

    சோர்ந்து போன உன் உள்ளம் பார்க்கிறார்
    உடைந்து போன உன்
    நெஞ்சம் காண்கிறார்
    அழைத்த தேவன் உன்னை
    நடத்திச் செல்வார்
    கண்ணீரை துடைப்பார்
    கவலைகள் மாற்றுவார்
    புது ஜீவன் ஊற்றுவார்
    புது சிருஷ்டியாக்குவார்

    அவருக்கான உன் இழப்புகள் பார்க்கிறார்
    அவருக்கான உன் அலைச்சல்கள் காண்கிறார்
    நீதி தேவன் உனக்கு நியாயம் செய்வார்
    நிச்சயம் பலன் தருவார்
    வியாதியில் சுகம் தருவார்

    துன்பப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை
    தள்ளப்பட்டாலும் மடிந்து போவதில்லை
    வாழும்தேவன் உன்னை காத்துக்கொள்வார்
    இயேசுவின் மகிமையுமே
    உன்னிலே வெளிப்படும்
    சீக்கிரம் நீங்கிடும் இந்த
    லேசான உபத்திரவம்

    பிரிவில் வாடும் உன் இதயம் பார்க்கிறார்
    கதறிஅழும் உந்தன் கண்ணீர் காண்கிறார்
    தாயைப்போல உன்னை தேற்றிடுவாரே
    ஒரு தந்தையைப் போல உன்னை
    ஆற்றிடுவாரே – இழந்த உறவாக
    உன்னோடு வாழ்ந்திடுவாரே
    கரம் பற்றி எந்நாளும்
    உன்னோடு நடந்திடுவார்


    Kalanguvathaen Kannnneer Viduvathumaen Naesarin Karangalae Thaettumae
    Yesuvin Kaayangal Aattumae

    Sornthu Pona Un Ullam Paarkkiraar
    Utainthu Pona Un
    Nenjam Kaannkiraar
    Alaiththa Thaevan Unnai
    Nadaththich Selvaar
    Kannnneerai Thutaippaar
    Kavalaikal Maattuvaar
    Puthu Jeevan Oottuvaar
    Puthu Sirushtiyaakkuvaar

    Avarukkaana Un Ilappukal Paarkkiraar
    Avarukkaana Un Alaichchalkal Kaannkiraar
    Neethi Thaevan Unakku Niyaayam Seyvaar
    Nichchayam Palan Tharuvaar
    Viyaathiyil Sukam Tharuvaar

    Thunpappattalum Kaividappaduvathillai
    Thallappattalum Matinthu Povathillai
    Vaalumthaevan Unnai Kaaththukkolvaar
    Yesuvin Makimaiyumae
    Unnilae Velippadum
    Seekkiram Neengidum Intha
    Laesaana Upaththiravam

    Pirivil Vaadum Un Ithayam Paarkkiraar
    Katharialum Unthan Kannnneer Kaannkiraar
    Thaayaippola Unnai Thaettiduvaarae
    Oru Thanthaiyaip Pola Unnai
    Aattiduvaarae – Ilantha Uravaaka
    Unnodu Vaalnthiduvaarae
    Karam Patti Ennaalum
    Unnodu Nadanthiduvaar

    Kalanguvathean Kanneer - கலங்குவதேன் கண்ணீர் Kalanguvathean Kanneer - கலங்குவதேன் கண்ணீர் Reviewed by Christking on September 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.