Kalvaariyin Karunaiyithae - கல்வாரியின் கருணையிதே - Christking - Lyrics

    Kalvaariyin Karunaiyithae - கல்வாரியின் கருணையிதே


    கல்வாரியின் கருணையிதே
    காயங்களில் காணுதே
    கர்த்தர் இயேசு பார் உனக்காய்
    கஷ்டங்கள் சகித்தாரே

    விலையேறப் பெற்ற திரு இரத்தமே – அவர்
    விலாவில் நின்று பாயுதே
    விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற
    விலையாக ஈந்தனரே

    பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ
    இவ்வன்புக் கிணையாகுமோ
    அன்னையிலும் அன்பு வைத்தே
    தன் ஜீவனை ஈந்தாரே

    சிந்தையிலே பாரங்களும்
    நிந்தனைகள் ஏற்றவராய்
    தொங்குகிறார் பாதகன் போல்
    மங்கா வாழ்வளிக்கவே


    Kalvaariyin Karunnaiyithae
    Kaayangalil Kaanuthae
    Karththar Yesu Paar Unakkaay
    Kashdangal Sakiththaarae

    Vilaiyaerap Petta Thiru Iraththamae – Avar Vilaavil Nintu Paayuthae
    Vilaiyaerap Pettanaay Unnai Maatta
    Vilaiyaaka Eenthanarae

    Pon Velliyo Mannnnin Vaalvo
    Ivvanpuk Kinnaiyaakumo
    Annaiyilum Anpu Vaiththae
    Than Jeevanai Eenthaarae

    Sinthaiyilae Paarangalum
    Ninthanaikal Aettavaraay
    Thongukiraar Paathakan Pol
    Mangaa Vaalvalikkavae

    Kalvaariyin Karunaiyithae - கல்வாரியின் கருணையிதே Kalvaariyin Karunaiyithae - கல்வாரியின் கருணையிதே Reviewed by Christking on September 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.