Ulagathil Siranthavar - உலகத்திலே சிறந்தவர் | Gana Sagayam - Christking - Lyrics

    Ulagathil Siranthavar - உலகத்திலே சிறந்தவர் | Gana Sagayam



    உலகத்திலே சிறந்தவர் ராஜா எங்க இயேசு தான்
    மக்களுக்கு உதவி செய்தார் குணாதிலே மன்னன் தான்
    பாசத்தோடு பேசுவதில் ஏழைகளின் தங்கம் தான்
    கஷ்டமுணு வந்து விட்டால் கை கொடுப்பார் இயேசு தான்
    பாதுகாப்பார் மக்களை வாழவைத்தார் ஜனங்களை
    அப்பா போல யாருமில்லை பாழாப் போன உலகிலே

    வேர்ல்ட் முழுக்க ஒலிக்குது பார் அல்லேலுயா சத்தம் தான்
    கருணை உள்ளம் கொண்டவர் இயேச ப்பா மட்டும் தான்
    அப்பா தானே காட்டினாரு நல்ல வழி ரூட்டு தான்
    நமக்காக பாடு பட்டார் இயேசய்யா ஒருவர் தான்
    நம்பினோர் வாழ்க்கையிலே நல்லதெல்லாம் செய்ய தான்
    பேதலகேம் ஊரினிலே பிறந்து வந்தார் இயேசு தான்
    நண்பர்களே கேளுங்க உங்க குறை தீருங்க
    இயேசு கிட்ட வாருங்கோ நன்மை வந்து சேருங்கோ

    தாய் மண்ணிலே வாழ்ந்திட நிரந்தரம் இல்லையா
    தாய போல காத்திடுவார் தந்தை இயேசு தாணைய்யா
    எல்லோருமே சிந்திக்கணும் இயேசைய்யா போலய்யா
    மக்களுக்காக அற்பணித்த நம்ம தெய்வம் இயேசைய்யா
    நல்ல வழி காட்ட தான தமிழ் நாட்டிலே யாரைய்யா
    உலகம் முழுதும் இயேசு போல யாரு ஒருத்தர் கூட இல்லைய்யா
    மனிதனாக வந்தாறு மனதுருக செய்தாறு
    மரணத்தயே வென்றாறு விண்ணுலகம் சென்றாறு

    உலகத்திலே சிறந்தவர் ராஜா எங்க இயேசு தான்
    மக்களுக்கு உதவி செய்தார் குணாதிலே மன்னன் தான்
    பாசத்தோடு பேசுவதில் ஏழைகளின் தங்கம் தான்
    கஷ்டமுணு வந்து விட்டால் கை கொடுப்பார் இயேசு தான்
    பாதுகாப்பார் மக்களை வாழவைத்தார் ஜனங்களை
    அப்பா போல யாருமில்லை பாழாப் போன உலகிலே


    English


    Tamil Christian Gana Song
    Ulagathil Siranthavar - உலகத்திலே சிறந்தவர் | Gana Sagayam Ulagathil Siranthavar - உலகத்திலே  சிறந்தவர் | Gana Sagayam Reviewed by Christking on September 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.