Yesu Namam - யேசு நாமம் | SPB - Christking - Lyrics

    Yesu Namam - யேசு நாமம் | SPB



    யேசு நாமம் ஒன்றை நம்புவீர்,
    பூலோகத்தாரே.

    யேசு நாமம் ஒன்றை நம்பும்;
    ரட்சண்யத்துக் கிதுவே ஸ்தம்பம்;
    பேசும் வேறே நாமமெல்லாம்
    பேருலகை ரட்சிக்காதே, - யேசு

    பார்த்திபன் தவீது குல
    கோத்திரக் கன்னிமரிபால்,
    நேத்திரம் போலே உதித்து
    நேமியின் ரட்சகனான, - யேசு

    பூதலத் தஞ்ஞான இருள்
    போக்கவே மெஞ்ஞான பெருஞ்
    ஜோதியாய் விளங்கும் நீதிச்
    சூரிய னான மகத்வ - இயேசு

    பாவிகளீடேற மோட்ச
    பாக்கியம் பெறுவதற்காய்
    ஜீவன் விட்டுயிர்த்தெழுந்து
    சேணுலகுக் கேறிச் சென்ற, - யேசு

    விண்டலத்தவர்கள் சூழ,
    வெருண்டலகை பதறி வீழ;
    மண்டலத்தைத் தீர்வை செய்ய
    மாமுகில் மீதேறி வரும், - யேசு


    English


    Yesu Namam - யேசு நாமம் | SPB Yesu Namam - யேசு நாமம் | SPB Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.