Kankalai Aeretuppaen - கண்களை ஏறெடுப்பேன் - Christking - Lyrics

    Kankalai Aeretuppaen - கண்களை ஏறெடுப்பேன்


    கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்
    கண்களை ஏறெடுப்பேன்.

    விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
    தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும் – கண்

    1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்
    காலைத் தள்ளாட வொட்டார்
    வேலையில் நின் றிஸ்ர வேலரைக் காத்தவர்
    காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் – கண்

    2. பக்தர் நிழல் அவரே – எனை ஆதரித்திடும்
    பக்கநிழல் அவரே
    எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
    அக்கோலம் கொண்டேன்னை அக்காவல் புரியவே – கண்

    3. எல்லாத் தீமைகட்கும் – என்னை விலக்கியே
    எல்லாத் தீமைகட்கும்
    பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
    நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர் – கண்.


    Kannkalai Aeraduppaen – Maamaeru Naeraay en
    Kannkalai Aeraduppaen.

    Vinnmann Unndaakkiya Viththakanidamirun
    Thennnnillaa Voththaasai Entanukkae Varum – Kann

    1. Kaalaith Thallaada Vottar – Urangaathu Kaappavar
    Kaalaith Thallaada Vottar
    Vaelaiyil Nin Risra Vaelaraik Kaaththavar
    Kaalaiyum Maalaiyum Kannnurangaaravar – Kann

    2. Pakthar Nilal Avarae – Enai Aathariththidum
    Pakkanilal Avarae
    Ekkaala Nilaimaiyum Enaich Sethappaduththaathu
    Akkolam Konntaennai Akkaaval Puriyavae – Kann

    3. Ellaath Theemaikatkum – Ennai Vilakkiyae
    Ellaath Theemaikatkum
    Pollaa Ulakinil Pokkuvaraththaiyum
    Nallaaththumaavaiyum Naatoorum Kaappavar – Kann.

    Kankalai Aeretuppaen - கண்களை ஏறெடுப்பேன் Kankalai Aeretuppaen - கண்களை ஏறெடுப்பேன் Reviewed by Christking on September 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.