Karthar en Meypparaay - கர்த்தர் என் மேய்ப்பராய் - Christking - Lyrics

Karthar en Meypparaay - கர்த்தர் என் மேய்ப்பராய்


கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்

ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்

மரணப் பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேன்
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே

சத்துருக்கள் முன்பின் எனக்காகவே
அவர் பந்தியன்றாயத்தஞ் செய்தார்
என்னைத் தம் எண்ணெயால் அபிஷேகித்து
என் பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்

ஜீவன் என்னில் உள்ள காலம் வரையும்
நன்மை கிருபை தொடரும்
கர்த்தரின் வீட்டில் நான் களிப்புடன் துதித்து
நித்திய நாட்களாய் நிலைத்திருப்பேன்


Karththar en Maeypparaay Irukkiraarae
Thaalchchi Ataiyaen Entumae
Avar Ennaip Pullulla Idangalil Maeyththu
Amarntha Thannnneeranntai Nadaththukiraar

Aaththumaavaith Thaettum Naesarennai
Aananthaththaal Niraikkiraarae
Makimaiyin Naamaththinimiththam Avar
Tham Neethiyin Paathaiyil Nadaththukiraar

Maranap Pallaththaakkil Nadanthitinum
Maaperum Theengukkum Anjaen
Karththar Ennodentum Iruppathaalae
Avar Kolum Thatiyum Ennaith Thaettidumae

Saththurukkal Munpin Enakkaakavae
Avar Panthiyantayaththanj Seythaar
Ennaith Tham Ennnneyaal Apishaekiththu
En Paaththiram Nirampiyae Valiyach Seythaar

Jeevan Ennil Ulla Kaalam Varaiyum
Nanmai Kirupai Thodarum
Karththarin Veettil Naan Kalippudan Thuthiththu
Niththiya Naatkalaay Nilaiththiruppaen

Karthar en Meypparaay - கர்த்தர் என் மேய்ப்பராய் Karthar en Meypparaay - கர்த்தர் என் மேய்ப்பராய் Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.