Kunappadu Paavi - குணப்படு பாவி - Christking - Lyrics

    Kunappadu Paavi - குணப்படு பாவி


    குணப்படு பாவி, தேவ
    கோபம் வரும் மேவி – இப்போ
    கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்
    காலமிருக்கையில் சீலமதாக நீ

    1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்
    கற்பனையைத் துறந்தாய்,
    பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்
    பாவ வழி திரிந்தாய்,
    புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,
    உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார்

    2. துக்கமடையாயோ? பாவி
    துயரமாகாயோ?
    மிக்கப் புலம்பாயோ? – மனம்
    மெலிந்துருகாயோ?
    இக்கணம் பாவக் கசப்பை யுணராயோ?
    தக்க அருமறைப் பக்கந் தொடராயோ?

    3. தாவீ தரசனைப்போல் – தன்னைத்
    தாழ்த்தும் மனாசேயைப்போல்
    பாவி மனுஷியைப்போல் – மனம்
    பதைத்த பேதுருபோல்,
    தேவனுக்கேற்காத தீமைசெய்தேனென்று
    கூவிப் புலம்பு நல் ஆவியின் சொற்படி

    4. உன்னை நீ நம்பாதே! – இவ்
    வுலகையும் நம்பாதே;
    பொன்னை நீ நம்பாதே – எப்

    பொருளையும் நம்பாதே;
    தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர்
    நின்னையும் ரட்சிப்பார் , அனைவரைப் பற்று


    Kunappadu Paavi, Thaeva
    Kopam Varum Maevi – Ippo
    Kanappoluthinil Kaayam Marainthupom
    Kaalamirukkaiyil Seelamathaaka Nee

    1. Karththanai Nee Maranthaay – Avar
    Karpanaiyaith Thuranthaay,
    Pakthiyinmai Therinthaay – Pollaap
    Paava Vali Thirinthaay,
    Puththiketta Aattuk Kuttiyae Oti Vaa,
    Uththama Maeyppanaar Kaththi Yalaikkiraar

    2. Thukkamataiyaayo? Paavi
    Thuyaramaakaayo?
    Mikkap Pulampaayo? – Manam
    Melinthurukaayo?
    Ikkanam Paavak Kasappai Yunaraayo?
    Thakka Arumaraip Pakkan Thodaraayo?

    3. Thaavee Tharasanaippol – Thannaith
    Thaalththum Manaaseyaippol
    Paavi Manushiyaippol – Manam
    Pathaiththa Paethurupol,
    Thaevanukkaerkaatha Theemaiseythaenentu
    Koovip Pulampu Nal Aaviyin Sorpati

    4. Unnai Nee Nampaathae! – Iv
    Vulakaiyum Nampaathae;
    Ponnai Nee Nampaathae – Ep

    Porulaiyum Nampaathae;
    Thannaip Paliyittuth Tharanni Meettavar
    Ninnaiyum Ratchippaar , Anaivaraip Pattu

    Kunappadu Paavi - குணப்படு பாவி Kunappadu Paavi - குணப்படு பாவி Reviewed by Christking on October 07, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.