Marida Em Ma Nesare - மாறிடா எம்மா நேசரே - Christking - Lyrics

    Marida Em Ma Nesare - மாறிடா எம்மா நேசரே


    மாறிடா எம்மா நேசரே- ஆ
    மாறாதவர் அந்பெந்நாளுமே
    கல்வாரிச் சிலுவை மீதிலே
    காணுதே இம்மா அன்பிதே – ஆ

    ஆ! இயேசுவின் மகா அன்பிதே
    அதன் ஆழம் அறியலாகுமோ
    இதற்கிணையேதும் வேறில்லையே
    இணை ஏதும் வேறில்லையே

    1. பாவியாக இருக்கையிலே – அன்பால்
    பாரில் உன்னைத் தேடி வந்தாரே
    நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
    நேசனாக மாற்றிடவே

    2. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் – தம்
    உள்ளம் போல் நேசித்ததினால்
    அல்லல் யாவும் அகற்றிடவே
    ஆதி தேவன் பலியானாரே

    3. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட – தூய
    தேவனின் விண் சாயல் அணிய
    ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
    ஆவலாய் அவரைச் சந்திக்க

    4. நியாய விதி தினமதிலே – நீயும்
    நிலையாகும் தைரியம் பெறவே
    பூரணமாய் அன்பு பெருக
    புண்ணியரின் அன்பு வல்லதே

    5. பயமதை நீக்கிடுமே – யாவும்
    பாரினிலே சகித்திடுமே
    அது விசுவாசம் நாடிடுமே
    அன்பு ஒருக்காலும் ஒழியாதே


    Maaridaa Emmaa Naesarae- Aa
    Maaraathavar Anpennaalumae
    Kalvaarich Siluvai Meethilae
    Kaanuthae Immaa Anpithae - Aa

    Aa! Yesuvin Makaa Anpithae
    Athan Aalam Ariyalaakumo
    Itharkinnaiyaethum Vaerillaiyae
    Innai Aethum Vaerillaiyae

    1. Paaviyaaka Irukkaiyilae - Anpaal
    Paaril Unnaith Thaeti Vanthaarae
    Neesan Entunnaith Thallaamalae
    Naesanaaka Maattidavae

    2. Ullaththaal Avaraith Thallinum - Tham
    Ullam Pol Naesiththathinaal
    Allal Yaavum Akattidavae
    Aathi Thaevan Paliyaanaarae

    3. Aaviyaal Anpaip Pakirnthida - Thooya
    Thaevanin Vinn Saayal Anniya
    Aaviyaalae Anpaich Sorinthaar
    Aavalaay Avaraich Santhikka

    4. Niyaaya Vithi Thinamathilae - Neeyum
    Nilaiyaakum Thairiyam Peravae
    Pooranamaay Anpu Peruka
    Punnnniyarin Anpu Vallathae

    5. Payamathai Neekkidumae - Yaavum
    Paarinilae Sakiththidumae
    Athu Visuvaasam Naadidumae
    Anpu Orukkaalum Oliyaathae

    Marida Em Ma Nesare - மாறிடா எம்மா நேசரே Marida Em Ma Nesare - மாறிடா எம்மா நேசரே Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.